பிரான்ஸில் இந்த முறை கடும் கோடை காலம் தொடங்குதற்கு முன்பாகவே
ஜூன் மாதத்தில் முதலாவது வெப்ப அலை அடுத்தவாரம் நாட்டைப் பாதிக்கும்
என்று வானிலை ஆய்வு மையமாகிய
Météo France எச்சரித்துள்ளது.
சஹாராவில் இருந்து வருகின்ற வெப்ப
அனல் (vague de chaleur) நாட்டின் தெற்குப் பகுதிகளில் 34-38 பாகை வெப்பத்தை
ஏற்படுத்தும் என்றும் உள்ளூர்மட்டத்தில்
அது 40 பாகை செல்சியஸ் வரை உயரலாம் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது. பாரிஸ் பிராந்தியத்தில்
34 பாகையாக அது உணரப்படலாம்.
புதன்கிழமை முதல் சனிக்கிழமை வரையான நாட்கள் மிகக் கூடிய வெப்ப
நிலை கொண்ட நாட்களாக இருக்கும்
என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நாட்டின் தெற்கே சில இடங்களில் கடந்த சனியன்று 40 பாகை
வெப்பம் பதிவாகியுள்ளது. சமீப ஆண்டுகளில் தொடர்ந்து அதிகரித்துவரு
கின்ற வெப்பம் வரட்சியையும் காட்டுத் தீஅழிவுகளையும் ஏற்படுத்துகிறது.
-பாரிஸிலிருந்து குமாரதாஸன்.
12-06-2022