இலங்கையின் சனத்தொகையில் 22% அல்லது 49 மில்லியன் மக்களுக்கு உணவு உதவி தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இலங்கையின் தற்போதைய உணவு நெருக்கடிக்கு பல காரணிகள் பங்களித்துள்ளதாக கொழும்பில் உள்ள ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனி சீகர் தெரிவித்துள்ளார்.
இந்த நெருக்கடியானது இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை கடுமையாக பாதித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2021-22 மஹா பருவங்களில் நெல் அறுவடை ஐம்பது சதவீதமாகக் குறைந்துள்ளதாகவும் அவர் கூறுகிறார்.