பிரான்ஸ்: வேலை நிறுத்தம் காரணமாக விமான சேவைகள் சில ரத்து!

0
254

நெருக்கடியைத் தவிர்க்க பயணிகளை
நேரகாலத்துடன் வருமாறு அறிவுறுத்து

பாரிஸ் றுவாஸி (Roissy Paris-Charles de Gaulle) விமானநிலையத்தில்
பணியாளர்களது வேலை நிறுத்தம் காரணமாக விமான சேவைகள் சில
ரத்துச் செய்யப்படலாம் என்று பயணிகள்
எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

நாளை வியாழக்கிழமை காலை நேர
அட்டவணைப்படி நடைபெறவுள்ள சேவைகளில் நான்கில் ஒரு பங்கு விமான சேவைகள் ரத்துச் செய்யப்படும்
என்றும் பயணிகள் தத்தமது விமான
நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு
தங்கள் பயணத்தை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் விமான நிலைய நிர்வாகம் அறிவித்திருக்கிறது.

சம்பள அதிகரிப்புக் கோரிப் பாதுகாப்பு
அலுவலர்கள் நடத்தும் வேலை நிறுத்தம் காரணமாகவே நாளை வியாழக்கிழமை காலை 07 மணிக்கும் பிற்பகல் 14 மணிக்கும் இடையே நடைபெறவிருந்த சில விமான சேவைகள் ரத்துச் செய்யப்படலாம் அல்லது தாமதமாகலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

எவ்வித நிபந்தனைகளும் இன்றி 300 ஈரோக்கள் சம்பள அதிகரிப்பை உடனடியாக வழங்குமாறு கேட்டு பணிப் புறக்கணிப்பில் ஈடுபடுமாறு விமான நிலையத்தின் தொழிற்சங்கங்கள்
சகல பணியாளர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளன.இதனால் சகல பிரிவுகளிலும் பணியாளர் நெருக்கடி ஏற்படலாம் என்றும் எனவே
பயணிகளை நேரகாலத்துடன் வருகை
தருமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

கொரோனாத் தொற்று நோய் நெருக்கடி
யை அடுத்து ஐரோப்பிய விமான நிலையங்களில் பணியாளர்களது எண்ணிக்கை குறைக்கப்பட்டிருந்தது.
தற்சமயம் பயணிகள் எண்ணிக்கை
திடீரென அதிகரித்துள்ளதால் போதிய
ஊழியர்கள் இன்றிச் சேவைகள் நெருக்கடியைச் சந்தித்துள்ளன. நெதர்லாந்து, ஜேர்மனி நாடுகளின் விமான நிலையங்களிலும்
பெரும் நெரிசல் நிலை தோன்றியுள்ளது.

இத்தகைய சூழ்நிலையில் பாரிஸ் விமான நிலையப் பணியாளர்களது வேலை நிறுத்தம் விமான சேவைகளை மேலும் பாதித்துள்ளது.

      -பாரிஸிலிருந்து குமாரதாஸன்.
                                          08-06-2022

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here