பிரான்சில் தமிழர் கலைபண்பாட்டுக் கழகத்தினரால் நடாத்தப்படும் “இசைவேள்வி” தொடர்பான அறிவித்தல் ஒன்றினை பிரான்சு தமிழர் கலைபண்பாட்டுக் கழகத்தினர் விடுத்துள்ளனர்.
அதன் முழு விவரம் வருமாறு:-
தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகம் ஊடாக, அனைத்து இசை ஆசிரியர்களின் கவனத்திற்கு!
அனைவருக்கும் புரட்சிகரமான வணக்கம்!
பிரான்சு தமிழர் கலைபண்பாட்டுக்கழகத்தால் ஆண்டு தோறும் நடாத்தப்பட்டு வரும் ‘ இசைவேள்வி” கர்நாடகச் சங்கீதப்போட்டியானது நாட்டில் ஏற்;பட்ட கோரோனா பேரிடரினால் உரிய காலத்தில் நடாத்தப்பட முடியாததொரு நிலையேற்பட்டிருந்ததை தாங்கள் அறிவீர்கள். தற்பொழுது படிப்படியாக அதன் வீரியம் குறைவடைந்து நாட்டின் நிலமைகள் வழமைக்கு திரும்பியதால் இப்போட்டியினை யூன் (இந்தமாதம்) நடாத்துவதற்கு ஏற்பாடுகள் எம்மால் செய்யப்பட்டன. ஆனால் இந்த காலப்பகுதியும், வரும் நாட்களும் மாதங்களும் கல்வி, விளையாட்டு, வாழ்விட நாட்டுப் பரீட்சைகள், கோடைகால விடுமுறைகளை தங்கள் தரப்பால் காரணமாகக் காட்டியிருந்தமையால் அதற்கு மதிப்பளித்தும், ஏனைய தேசம் நோக்கிய செயற்பாடுகளை கவனத்திற் கொண்டும், 2022 ஆம் ஆண்டு ‘இசைவேள்வி” நிகழ்வு நடாத்தப்பட மாட்டாது என்பதை தங்கள் அனைவரின் கவனத்திற்கு அறியத்தருவதுடன்.
எமது மற்றொரு போட்டியான ‘ சங்கொலி ” தேசவிடுதலைப்பாடற் போட்டி 2022 நிகழ்வு இந்த ஆண்டு திட்டமிடலுக்கேற்ப எதிர் வரும் செப்ரெம்பர் மாதம் பிரமாண்டமாகவும் எழுச்சி பூர்வமாகவும் நடைபெறவுள்ளது என்பதையும் தங்களுக்கு தெரிவிப்பதுடன், இப்போட்டியை திறம்பட நடாத்துவதற்கு அதிகமான மாணவர்களையும், போட்டியாளர்களையும் தயார் செய்து பங்கு கொள்ள வைத்து தாங்களும் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும் என்றும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
நன்றி
இப்படிக்கு
பொறுப்பாளர்: தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் – பிரான்சு