சிறிலங்கா கடற்படை அடாவடி: ஏழு தமிழ் மீனவர்கள் படுகாயம்!

0
187

பேசாலையில் இருந்து கடல் தொழிலிறகுச் சென்ற மீனவர்கள்மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல நடத்தியதில் படுகாயமடைந்த ஏழு தமிழ் மீனவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடற்படையினருக்கும் மீனவர்களிற்கும் இடையே முரண்பாடு ஏறபட்டுள்ளது. அதனை தொடர்ந்து கடற்படையினர் மீனவர் ஒருவர் மீது கடும் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த மீனவர் பேசாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படடிருந்தார்;. 

ஏனைய மீனவர்கள் தொழிலிற்குச் சென்றிருந்த நிலையில் அதிகாலை தலை மன்னார் கடற்பரப்பில்   தொழிலில ஈடுபட்டுக்கொண்டிருந்த சமயம் அவ்விடத்திறகு படகில் வந்த கடற்படையினர் மீனவர்களை மீண்டும் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

தொடர்ந்து மக்கள் நடமாட்டமற்ற மணல் திட்டி பகுதிக்கு மீனவர்களை அழைத்து சென்று ஆறு மீனவ்hகள் மீது தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

தாக்கப்பட்ட 6 மீனவர்களும் ஏனைய மீனவர்களின்  உதவியுடன் பேசாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here