
ஜேர்மனியின் மேற்குப் பகுதியில் உள்ளூர் ரயில் ஒன்று தடம் புரண்டதில்
நால்வர் உயிரிழந்துள்ளனர். ஏராளமான
பயணிகள் படுகாயமடைந்துள்ளனர்.
மிகப் பெருமெடுப்பிலான மீட்டுப் பணி
கள் அங்கு நடைபெற்று வருகின்றன.
பலர் மோசமாகக் காயமடைந்துள்ளதால்
உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிக
ரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

நாட்டின் மேற்குப் பகுதியில் பவேரியா
(Bavaria) மாநிலத்தின் கார்மிஷ்-
பார்டென்கிர்சென்(Garmisch-Partenkirchen) என்ற இடத்தில் அல்பின் (Alpine) மலைப் பகுதியில் இந்த விபத்து இன்று மதியம்
இடம்பெற்றது. அருகே ஒஸ்ரியா நாட்டில்
இருந்தும் மீட்புக் ஹெலிகள் விபத்து
நடந்த பகுதிக்கு விரைந்துள்ளன.

மியூனிச் (Munich) நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்த ரயிலின் பெட்டிகள்
சில ஒன்றோடு ஒன்று சிக்கிக் கொண்ட
தாலேயே விபத்து நேர்ந்துள்ளது என்று
பூர்வாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன
இன்று பாடசாலை இறுதி நாள் என்பதால் ரயிலில் மாணவர்கள் அதிகம் பேர் பயணம் செய்தனர் என்று தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தவர்களது விவரங்கள் உடனடியாகத் தெரியவரவில்லை.
காயங்களுடன் 60 பேர் சிகிச்சை பெற்று
வருவதாகவும் அவர்களில் 16 பேர் ஆபத்
தான நிலையில் உள்ளனர் என்றும்
அதிகாரி ஒருவர் “பில்ட்” செய்திச் சேவை
க்குத் தெரிவித்திருக்கிறார்.

விபத்து நடந்த மார்க்கத்தில் ரயில்
சேவைகள் தடைப்பட்டுள்ளன. பயணி
களுக்கு மாற்று வசதிகள் செய்யப்பட்டு
வருகின்றன என்று ஜேர்மனியின் தேசிய
ரயில் போக்குவரத்து நிறுவனமாகிய Deutsche Bahn தெரிவித்துள்ளது. உள்
துறை அமைச்சர் உட்பட மாநில அரசு
அதிகாரிகள் விபத்து நடந்த பகுதிக்கு
விரைந்துள்ளனர்.
(படங்கள் :நன்றி Bild செய்திச் சேவை)
-பாரிஸிலிருந்து குமாரதாஸன்.
03-06-2022