யாழ்ப்பாணம் பொது நூலகம் எரியூட்டப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்து நேற்று கொழும்பு காலிமுகத்திடலில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.
கொழும்பு – காலிமுகத்திடலில் கோட்டா கோ கம போராட்டத்தை முன்னெடுத்து வருபவர்களே இந்த எதிர்ப்புப் போராட்டத்தை நடத்தினர்.
யாழ்ப்பாணம் பொது நூலகம் 1981 ஜூன் முதலாம் திகதி சிங்கள வன்முறை கும்பலால் தீயிட்டு எரிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் இடம்பெற்று 41ஆவது ஆண்டுகள் இன்று முதலாம் திகதியுடன் கடந்தன. இந்த நிலையில், இந்தச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக தென்னிலங்கையில் முதன்முறையாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
கோட்டா கோ கம 54ஆவது நிறைவு தினமான நேற்று இடம்பெற்ற பேரணியில் “அரச ஆதரவாளர்களால் யாழ்ப்பாண பொதுசன நூலகம் எரிக்கப்பட்டு 41 ஆண்டுகள்” என்று எழுதப்பட்ட பதாதையை தாங்கியவாறு எதிர்ப்புப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.