வட மாகாண சபையின் தீர்மானங்கள் ஐ.நா சபைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை!

0
113

northern_provincial_councilவட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள இன அழிப்பு தொடர்பான முக்கியமான இரு தீர்மானங்கள், முதலமைச்சரின் கடித தலைப்பு மற்றும் கையெழுத்துடன் ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்திற்கும், 47 அங்கத்துவ நாடுகளுக்கும் கையளிக்க முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் ஒப்புதல் வழங்கிருந்தார்.

இந்நிலையில், குறித்த இரு தீர்மானங்களையும், தனது கையொப்பத்துடன் இன்றையதினம் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்திடம், முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கையளித்துள்ளார்.

குறித்த தீர்மானங்கள் அடங்கிய பிரதிகள், இன்று நண்பகல் 12.30 மணியளவில் முதலமைச்சரால், சிவாஜிலிங்கத்திடம் கையளிக்கப்பட்டது.

இந்த விடயம் தொடர்பாக கருத்து வெளியிட்ட சிவாஜிலிங்கம்,

ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தின் கூட்டத்தொடர் எதிர்வரும் 14ம் திகதி தொடங்கவுள்ளது. இந்நிலையில் கூட்டத்தொடர் காலத்தில் வடமாகாணசபை சார்பில் குழு ஒன்றை ஜெனீவா அனுப்பி வைக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை சாத்தியப்படாத நிலையில், மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட இன அழிப்பு தொடர்பான இது முக்கிய தீர்மானங்களை அனுப்பி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தனது கையொப்பம் மற்றும் கடித தலைப்புடன் கூட்டத்தொடர் நடைபெறும் காலத்தில் அங்கு செல்லவுள்ள மாகாணசபை உறுப்பினர்கள் ஊடாக 47 நாடுகளுக்கும், ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்திற்கும் அனுப்பி வைக்க, முதல்வர் ஒப்புதலை வழங்கியிருந்தார்.

இதற்கமைய இன்றைய தினம் காலை எம்மை தமது அலுவலகத்திற்கு அழைத்த முதலமைச்சர், குறித்த பிரதிகளை தனது கையொப்பத்துடன் எமக்கு வழங்கி வைத்தார். இந்நிலையில் தீர்மானத்தை 47 நாடுகளின்
பிரதிநிதிகளிடமும் கொண்டு செல்ல நாம் நடவடிக்கை எடுப்போம் என சிவாஜிலிங்கம் ஊடகங்களுக்கு இன்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here