சுவிசில் தியாகி அன்னை பூபதி அவர்களின் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டி – 2022

0
312

இந்திய அமைதிப்படை விடுதலைப்புலிகளுடனான போரினை நிறுத்த வேண்டும், விடுதலைப்புலிகளுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் ஆகிய இரு கோரிக்கைகளை

முன்வைத்து 19.03.1988 தொடக்கம் 19.04.2022 வரை அகிம்சை வழியில் இந்திய இராணுவத்திற்கு எதிராக சாகும்வரை உண்ணா நோன்பிருந்து சாவைத் தழுவிக்கொண்ட தியாகச்சுடர் அன்னை பூபதி அவர்களின் 34வது ஆண்டு நினைவெழுச்சி நாளினை நினைவுகூர்ந்து நடாத்தப்பட்ட இச் சுற்றுப்போட்டிகளானது 29.05.2022 அன்று லவுசான் மற்றும் பேர்ண் மைதானங்களில் நடைபெற்றன.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் விளையாட்டுத்துறையினால் நடாத்தப்பட்ட போட்டிகளானது பொதுச்சுடரேற்றலுடன், தமிழீழத் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து ஈகைச்சுடரேற்றல், அகவணக்கம், மலர்வணக்கத்துடன் ஆரம்பமானது.

எதிர்கால சந்ததியினரிடம் தமிழ்த்தேசிய உணர்வைப் பேணவும், மாவீரர்களின் வீரவரலாறுகள், தியாகங்களைப் பாதுகாக்கவும், தாயகம் நோக்கிய தேடலை உண்டுபண்ணும் நோக்கிலும் ஒழுங்கமைக்கப்பட்ட இவ் விளையாட்டுப் போட்டியில் உதைபந்தாட்டம், துடுப்பாட்டம், கரப்பந்தாட்டம் போன்ற அனைத்துப் போட்டிகளும் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்றன.

வெற்றி பெற்ற வீரர்களுக்கும், கழகங்களைச் சேர்ந்த வீரர்களுக்கான பதக்கங்களும், வெற்றிக்கிண்ணங்களும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டதனைத் தொடர்ந்து தமிமீழத் தேசியக்கொடி கையேற்கப்பட்டு தாரக மந்திரத்துடன் போட்டிகள் நிறைவடைந்தன. இவ் விளையாட்டுப்போட்டிகள் சிறப்பாக நடைபெற உதவிய அனைவருக்கும் எமது வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
போட்டி முடிவுகள்

வளர்ந்தோர்பிரிவு 9 எள 9 உதைபந்தாட்டம்

1ம் இடம் தமிழ் யுத் விளையாட்டுக் கழகம், செங்காளன்
2ம் இடம் யங் ஸ்ரார் விளையாட்டுக் கழகம், லீஸ்
3ம் இடம் றோயல் விளையாட்டுக் கழகம், பேர்ண்
4ம் இடம் இளம் சிறுத்தைகள் விளையாட்டுக் கழகம் சுவிஸ்
இறுதி ஆட்டநாயகன் கணபதிப்பிள்ளை மதீனன், தமிழ் யுத் விளையாட்டுக் கழகம்
சிறந்த விளையாட்டு வீரர் தேவராஐா துவாரகன், யங் ஸ்ரார் விளையாட்டுக் கழகம்
சிறந்த பந்துகாப்பாளர் ஐெயாகரன் ஆகாஸ், தமிழ் யுத் விளையாட்டுக் கழகம்
ஆதிக கோல்களைப் போட்டவீரர் சதானந்தன் நிசாத், யங் ஸ்ரார் விளையாட்டுக் கழகம்

மென்பந்து துடுப்பாட்டம் வளர்ந்தோர்

1ம் இடம் சொலத்தூண் போய்ஸ் விளையாட்டுக்கழகம்
2ம் இடம் போனிக்ஸ் விளையாட்டுக் கழகம்
சிறந்த பந்துவீச்சாளர் பரமநாதன் பிரதீபன், சொலத்தூண் போய்ஸ் விளையாட்டுக்கழகம்
சிறந்த துடுப்பாட்ட வீரர் பரமநாதன் பிரதீப், சொலத்தூண் போய்ஸ் விளையாட்டுக்கழகம்
சிறந்த சகலதுறை ஆட்டக்காரர் சண்முகநாதன் கஐீபன், போனிக்ஸ் விளையாட்டுக் கழகம்
இறுதி ஆட்டநாயகன் செல்வநாயகம் திவாகரன், சொலத்தூண் போய்ஸ் விளையாட்டுக்கழகம்
தொடரின் நாயகன் சூரசங்காரம் காண்டீபன், சொலத்தூண் போய்ஸ் விளையாட்டுக்கழகம்
சிறந்த பந்து தடுப்பாளர் விஐயரட்ணம் ரஐீவன், சொலத்தூண் போய்ஸ் விளையாட்டுக்கழகம்
சிறப்புப் பரிசு ஐீவகுமார் ஸ்ரீபன்ராஐா ஏசியன் கோல்ட் ஸ்ரார் விளையாட்டுக்கழகம்

கரப்பந்தாட்டம் ஆண்கள் (5 பேர்)
1ம் இடம் நீலநட்சத்திர விளையாட்டுக் கழகம் லவுசான் B அணி
2ம் இடம் ஈழம் ஸ்ரார் விளையாட்டுக் கழகம் ஐெனீவா
இறுதி ஆட்டநாயகன் குட்டி நீலநட்சத்திர விளையாட்டுக் கழகம் லவுசான் B அணி;
சிறந்த விளையாட்டு வீரர் சிம்சன் ஈழம் ஸ்ரார் விளையாட்டுக் கழகம் ஐெனீவா

கரப்பந்தாட்டம் ஆண்கள் (4 பேர்)
1ம் இடம் கடல் பறவைகள் விளையாட்டுக் கழகம்
2ம் இடம் நீலநட்சத்திர விளையாட்டுக் கழகம் லவுசான் Aஅணி
இறுதி ஆட்டநாயகன் பிரதீஸ் கடல் பறவைகள் விளையாட்டுக் கழகம
சிறந்த விளையாட்டு வீரர் குமரன், நீலநட்சத்திர விளையாட்டுக் கழகம் லவுசான் A அணி

விளையாட்டுத்துறை
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here