வீரவேங்கை அலிஸ்டன் நினைவாக 2022 ல் நடைபெற்ற உதைபந்தாட்டப்போட்டி !

0
290

பிரான்சில் பாரிசில் செந்தமிழ் விளையாட்டுக்கழகத்தினரால் 4 ஆவது தடவையாகவும், மாவீரன் வீரவேங்கை அலிஸ்டன் நினைவாக 2022 ல் நடைபெற்ற உதைபந்தாட்டப்போட்டி ஸ்தான் மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.

மாவீரர்களுக்கான ஈகைச்சுடரினை கப்டன் துரியோதனன் அவர்களின் சகோதரர் ஏற்றி வைக்க மாவீரர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பிரான்சு ஈழத்தமிழர் உதைபந்தாட்டச்சம்மேளனத்தலைவர் திரு. சுரேஸ் அவர்களும் மலர்வைத்து மரியாதை செய்தனர்.

தொடர்ந்து நினைவுரையை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப்பொறுப்பாளர் திரு. மேத்தா அவர்கள் உரையாற்றினார். அவர் தனது உரையில் உலகில் நாம் எங்கு எந்தநிலையில் வாழ்ந்தாலும் எம்மை இந்த உலகிற்கு காட்டியவர்கள் மாவீரர்களும், அவர்களின் உயிர்த்தியாகம் என்பதையும், அதில் ஒருவராக வீரவேங்கை அலிஸ்ரன் இருந்திருக்கின்றார் என்றும், இன்று எத்தனையோ வழிமுறைகள், வாழ்வுகள் இருந்தாலும் அவற்றை நாடாது தேடாது எம்மான மாவீரர்களை நினைந்தும், அடுத்த விளையாட்டுத்தலைமுறைக்கும் இதனை கொண்டு சென்று சேர்க்கும் உன்னபணியை செய்யும் செந்தமிழ் விளையாட்டுக்கழகத்திற்கும், உறுப்பினர்களுக்கும், மக்களுக்கு நன்றி உணர்வோடு கரம் பற்றிக்கொள்வதையும், ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனத்துக்கும் நன்றியைத் தெரிவித்திருந்தார். இப்போட்டியில் பிரான்சின் பல முன்னனி உதைபந்தாட்டக்கழகங்கள் பங்குபற்றிச்சிறப்பித்தனர்.

உதைபந்தாட்டப்போட்டிகளை ஈழத்தமிழர் விளையாட்டுச் சம்மேளனத்தலைவர், செந்தமிழ் விளையாட்டுக்கழக தலைவர், உறுப்பினர்கள், தமிழர் விளையாட்டுத்துறை துணைப்பொறுப்பாளர், கைகொடுத்து வாழ்த்தி போட்டிகளை ஆரம்பித்து வைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here