உக்ரைனின் கிழக்குப் பகுதியின் லுஹான்ஸ்க், டொனட்ஸ்க் வட்டாரங்களில் உள்ள 40க்கும் மேற்பட்ட நகரங்களில் ரஷ்யப் படையினர் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியிருப்பதாகத் தெரியவந்துள்ளது.
பாடசாலைகள் உட்பட 47 பொது இடங்கள் அழிக்கப்பட்டுவிட்டன அல்லது சேதமாக்கப்பட்டுள்ளன என்று உக்ரைன் கூறியது.
பொதுமக்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தவில்லை என்று ரஷ்யா தொடர்ந்து கூறிவருகிறது. ஆனால் ஹார்கிவ் நகரில் பொதுக் கட்டமைப்பைச் சேதப்படுத்தியாக ரஷ்ய வீரர்கள் இருவர் ஒப்புக்கொண்டுள்ளனர்.