வட கொரியா மீது ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை மேலும் தடைகளை விதிக்கும் என்று அமெரிக்கா கூறியுள்ளது.
அடுத்த ஒருசில தினங்களில் அது குறித்து பாதுகாப்புச் சபை வாக்களிக்கும் என்று அது குறிப்பிட்டது.
வட கொரியா புவியீர்ப்பு ஏவுகணைச் சோதனைகளை நடத்தியதால் அதற்கு எதிரான கடும் நடவடிக்கை தேவை என்று அமெரிக்கா கருதுகிறது. வட கொரியா கடந்த புதன்கிழமை இவ்வாண்டின் 17ஆவது ஏவுகணைச் சோதனையை நடத்தியது.
மூன்று ஏவுகணைகள் கிழக்குக் கடலில் பாய்ச்சப்பட்டன. அனைத்துமே புவியீர்ப்பு ஏவுகணைகள் என்று கருதப்படுகிறது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தென் கொரிய, ஜப்பானியப் பயணத்தை முடித்த ஒருசில மணிநேரத்தில் அந்த ஏவுகணைச் சோதனையை வட கொரியா நடத்தியது.