யாழில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த அதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன்பாக உந்துருளியை டிப்பர் வாகனம் மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் யாழ்.சாவகச்சேரியை வதிவிடமாகவும் கொண்ட இவர்,
முல்லைத்தீவு முத்தையன் கட்டு வலதுகரை ஆரம்ப பிரிவு பாடசாலையான முத்துவிநாயகர் தமிழ் வித்தியாலய அதிபர் திரு.கந்தையா.சத்தியசீலன் அவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளார்,
இவர் முன்னாள் விக்கினேஸ்வர வித்தியாலய ஆசிரியர் என்பதும் குறிப்பிடத்தக்கது,
இச் சம்பவமானது அவரிடம் கல்விகற்ற மாணவர்கள் ஆசிரியர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது,
இவரது இழப்புக் குறித்து மாணவர் ஒருவர் தனது முகநூலில் தெரிவித்ததாவது:-