செவ்வாயில் தெரியும் நுழைவாயில் இயற்கையான புவியியல் அம்சமாம்!

0
107


—ஊகங்களுக்கு நாசா முற்றுப்புள்ளி

செவ்வாய்க் கோளில் கற்பாறைத் தொடர் ஒன்றில் சிறிய கதவு (gateway) போன்ற நுழைவாயில் தோன்றும் படங்கள் கடந்த சில நாட்களாக ஊடகங்களில் பகிரப்பட்டு
வருகின்றன. அது வேற்றுக் கிரகவாசிக
ளின் வதிவிட வாயிலாக இருக்கலாம் என்றவாறு பல ஊகங்களும் கற்பனைக்
கதைகளும் வெளியிடப்பட்டுவருகின்
றன.

செவ்வாயின் தரைத் தோற்றத்தை ஆய்வு
செய்துவருகின்ற அமெரிக்க விண்வெளி
இயந்திரமாகிய”Curiosity robot” பூமிக்கு அனுப்பிய படங்களிலேயே கற்குகை
ஒன்றின் நுழைவாயில் கதவு போன்ற
தோற்றம் தென்படுகிறது. கடந்த மே 7 ஆம் திகதி முதல் அந்தப் படம் உலகம் முழுவதும் பலரதும் ஆர்வத்தை ஈர்த்த
காட்சியாக மாறியுள்ளது.

அந்தப் படம் சிறிய அடையாளம் ஒன்றின்
உருப்பெருப்பிக்கப்பட்ட காட்சி என்பது
தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மைய
மான ‘நாசா’ அறிவியலாளர்களது தகவலின்படி, படத்தில் தோன்றுகின்ற
வாயில் 30 சென்ரிமீற்றர் உயரமும் 40 சென்ரிமீற்றர் அகலமும் கொண்ட மிகச் சிறிய நாய் வளை (dog’s kennel) போன்ற ஒர் அமைப்பு என்றும், பாறையில் இயற்கையாக உருவாகிய புவியியல்
அம்சமே அது என்றும் தெரிவிக்கப்படு
கிறது.

“அது இயற்கையான புவியியல் அம்சம்! உங்கள் மனம் தெரியாத ஒன்றை உணர முயற்சிப்பதால், அது ஒரு வாசல் போல் தோன்றலாம்” – என்று நாசா விளக்கமளித்
துள்ளது.

செவ்வாய் உட்பட வேற்றுக் கிரகங்களில்
கிரகவாசிகள் வசிக்கலாம் என்ற நம்பிக்கை நீண்டகாலமாக நீடித்து வருவதால் செவ்வாயின் படங்களைப்
பார்ப்பவர்கள் அவற்றில் மனித உருவங்களையும் குடியிருப்புகளையும் தேடிக் கற்பனை செய்கின்றனர் என்று
அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.


         -பாரிஸிலிருந்து குமாரதாஸன்.
                                            25-05-2022

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here