மன்னாரிலும் சர்வதேச விசாரணை நடாத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி கையெழுத்துப் போராட்டம்

0
148

இலங்கையில் இடம் பெற்ற போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச பொறிமுறையின் கீழ் சர்வதேச விசாரனை நடாத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று வியாழக்கிழமை(10) மன்னாரில் கையெழுத்து வேட்டை இடம்பெற்றது.

மன்னார் மாவட்டச் செயலக பிரதான வீதிக்கு முன்பாக குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

மன்னார் பிரஜைகள் குழு மற்றும் சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறையும் தமிழர் செயற்பாட்டுக்குழுவும் இணைந்து குறித்த கையெழுத்து வேட்டையினை ஆரம்பித்து வைத்துள்ளனர்.

மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை இம்மானுவேல் செபமாலை அடிகளாரின் தலைமையில் இடம் பெற்ற குறித்த கையெழுத்து வேட்டையில் தமிழ் காங்கிரசின் தலைவர் கஜேந்திரகுமார் பொண்ணம்பலம்,வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன்,வடமாகாண சபை உறுப்பினர் வைத்தியகலாநிதி ஜீ.குணசீலன்,மன்னார் பிரதேச சபையின் முன்னாள் தலைவர் மாட்டீன் டயேஸ்,முன்னாள் உப தலைவர் அந்தோனி மார்க்,மன்னார் சமாதான அமைப்பின் தலைவர் பீ.ஏ.அந்தோனி மார்க்,எழுத்தாளர் வி.எஸ்.சிவகரன், வடமாகாண காணாமல் ஆக்கப்பட்டவர்களது குடும்பங்களின் சங்க பிரதி நிதிகள் என பலர் கலந்து கொண்டு கையெப்பமிட்டனர்.

அத்துடன் மன்னாரில் உள்ள வர்த்தகர்கள்,பொதுமக்கள்,சமூக ஆர்வலர்கள்,எழுத்தாளர்கள் என பலரும் கலந்து கொண்டு சர்வதேச விசாரனையை ஆதரித்து கையெழுத்து வேட்டையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
1

2

3

4

5

6

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here