உலகம் முழுவதும் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை முதல்முறையாக 10 கோடியைத் தாண்டியுள்ளதாக ஐ.நா. அகதிகள் அமைப்பு திங்கட்கிழமை தெரிவித்தது.
இதுகுறித்து ஐ.நா. அகதிகள் அமைப்பின் ஆணையர் ஃபிலிப்போ கிராண்டி கூறியிருப்பதாவது:
மோதல்கள், வன்முறை, மனித உரிமை மீறல்கள், துன்புறுத்தல்களால் வீடுகளைவிட்டு வெளியேறிய அகதிகள் எண்ணிக்கை 10 கோடியைத் தாண்டியுள்ளது. 10 கோடி என்பது மிகப்பெரிய எண்ணிக்கையாகும். மோதல்களுக்குத் தீா்வு காணவும், துன்புறுத்தல்களை முடிவுக்குக் கொண்டுவரவும், அப்பாவி மக்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறுவதற்கு காரணமான பிரச்னைகளைத் தீர்க்கவும் இந்த எண்ணிக்கை ஓர் எச்சரிக்கையாக அமைய வேண்டும் எனக் கூறியுள்ளார்.
‘எத்தியோப்பியா, புர்கினோ ஃபாஸோ, மியான்மார், நைஜீரியா, ஆப்கானிஸ்தான், காங்கோ ஆகிய நாடுகளில் நடைபெற்று வரும் புதிய வன்முறை அல்லது மோதல்களால் அகதிகள் எண்ணிக்கை அதிகரித்து, உலகம் முழுவதும் அகதிகளாக இடம்பெயர்ந்தோர் எண்ணிக்கை 2021-ஆம் ஆண்டு இறுதியில் 9 கோடியாக இருந்தது. உக்ரைன் மீதான ரஷியாவின் போர் தொடங்கியதிலிருந்து 60 லட்சம் பேர் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். 80 லட்சம் பேர் உள்நாட்டிலேயே வீடுகளைவிட்டு வெளியேறியுள்ளனர்.
10 கோடி அகதிகள் என்பது உலக மக்கள்தொகையில் ஒரு சதவீதத்துக்கும் அதிகமாகும். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையே தீர்வாகும்’ என ஐ.நா. அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
Home
உலகச்செய்திகள் உலகம் முழுவதும் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை 10 கோடியைத் தாண்டியது: ஐ.நா. அமைப்பு!