பொண்டி பிராங்கோ தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் 21/05/2022 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு தமிழினஅழிப்பு நாளான மே-18 நினைவேந்தில் பொண்டி நகரசபை முன்றலில் எழிச்சியாக நடைபெற்றது.
பொதுச்சுடர் ,ஈகைச்சுடர், அகவணக்கத்துடன் நினைவேந்தல் நிகழ்வு ஆரம்பமானது.
குறித்த இவ் நினைவேந்தல் நிகழ்வில் பொண்டி நகரசபை முதல்வர் மற்றும் பிரதி முதல்வர்கள் ,நகரசை உறுப்பினர் செல்வி.பிரேமி பிரபாகரன் மற்றும் 93 மாவட்ட சபை உறுப்பினர் ஆகியோர் கலந்துகொண்டர் குறித்த இவ் நினைவேந்தல் நிகழ்வில் பொண்டி நகரசபை முதல்வர் உரையாற்றும்போது நாங்கள் அனைவரும் இன்று தமிழின அழிப்பின் நினைவு நாளை இங்கு கொண்டாடிக்கொண்டு இருக்கின்றோம்.
கடந்து 13 மே அன்று பாராளுமன்றத்தில் தமிழ் மக்களுக்கான ஆய்வுக்குழு நடாத்திய கருத்தரங்கிலும் பொண்டி நகரசபையின் உதவி மேயரும் நகரசபை உறுப்பினரும் கலந்துகொண்டார்கள். இந்த நிகழ்வுகளின் பொண்டி நகரசபையை சார்ந்தவர்களும் கலந்து கொண்டது அசியமானதாகவும் முக்கியமானதாகவும் நான் பார்க்கின்றேன். தமிழ் மக்களின் இனப்படுகொலை அங்கீகரிக்கப்பட வேண்டும். தமிழ் மக்களுக்கு விரைவில் நீதி கிடைக்க வேண்டும்.
பொண்டி நகரசபையூடாகவும் பிரான்சின் தேசிய மட்டத்தின் ஊடக செய்ய முடிந்த அனைத்துபணிகளையும் நாம் செய்வோம். பொண்டி நகரசபை எப்போதும் தமிழ் மக்கள் அருகில் நிற்கும். ஒன்றாய் பயணிப்போம் என்று தனது உரையில் தெரிவித்திருந்தார்.
பொண்டி நகரசபை முதல்வரி உரையை தமிழில் நகரசபை உறுப்பினர் செல்வி பிரேமி பிரபாகரன் அவர்கள் மொழிபெயர்ப்புச் செய்தார். மற்றும் எழுச்சி நடனங்கள், தாயக பாடல்கள் என பல நிகழ்வோடு. தமிழீழ மக்களின் நம்பிக்கை பாடலான நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடலுடனும் நம்பிக்கையுடனும் நினைவேந்தில் நிகழ்வு நிறைவுபெற்றது.