நேற்று Norsborg- Stockholm இல் உணர்வுபூர்வமாக ‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்’ நடைபெற்றது. ஒரு வேலைநாளாக இருந்தும், எதிர்பார்த்ததிலும் பார்க்க அதிக அளவில் சிறு பிள்ளைகளும் பெரியவர்களும் கலந்துகொண்டு உணர்வு பூர்வமாக நினைவேந்தினார்கள் . இந்த நிகழ்விற்கு இடவசதி செய்துதவிய சுவீடன் ஈழத்தமிழர் ஒன்றியத்திற்கு நன்றி.
-சுவீடன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு