அனைத்து உயர் தேசிய டிப்ளோமா மாணவர் கூட்டமைப்பு, இன்று பிற்பகல் முன்னெடுத்த ஆர்ப்பாட்டப் பேரணியின் மீது பொலிஸார் கண்ணீரப்புகை பிரயோகம், நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உலக வர்த்தக சந்தைப் பகுதிக்கூடாக ஆர்ப்பாட்டப் பேரணியானது சென்ற நிலையில் ஆர்ப்பாட்டத்தை தடுப்படுதற்கான முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டபோது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.
இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்துசெல்வதற்காக பொலிஸார் கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொண்டனர்.
இந்நிலையில் உலக வர்த்தக சந்தைப் பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரின் தடைகளை மீறிக்கொண்டு செல்ல முற்பட்டனர். வீதித்தடைகளை இழுத்து வீதியில் வீசி எறிந்ததையும் அவதானிக்க முடிந்தது.
அனைத்து உயர் தேசிய டிப்ளோமா மாணவர் கூட்டமைப்பினரின் ஆர்ப்பாட்டப் பேரணிக்கு எதிராக கொழும்பு கோட்டை பொலிஸார் நீதிமன்ற உத்தரவை பெற்றுக்கொண்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.