இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை கோரி தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் கையெழுத்து போராட்டம் இன்று யாழ்.பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
இதன்போது பெருந்திரளான பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு குறித்த கையெழுத்து போராட்டத்திற்கு தங்களது ஆதரவை வெளிப்படுத்தி இருந்தனர்.
இலங்கையில் நடைபெற்ற சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமை மீறல்களை புரிந்தோருக்கு எதிராக சர்வதேச குற்றவியல் செயன்முறை பொறிமுறை ஒன்றினை ஏற்படுத்துமாறு வலியுறுத்தி கையெழுத்து போராட்டம் வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
வடக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் சர்வதேச பொறுப்புக்கூறலுக்கான சமூக அமைப்பின் ஏற்பாட்டில் இப்போராட்டம் இலங்கையின் வடக்கு, கிழக்கு ஆகிய தமிழர்கள் வாழும் பகுதிகளில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.