தமிழகத்தில் விடுதலைக்காக ஏங்கும் ஈழத்தமிழர்களின் உண்ணாவிரத போராட்டம்!

0
218

கடல் வழியாக இந்தியாவிற்கு சென்றமையாலும், இந்திய கடவுச்சீட்டு பெறுவதற்கு முயற்சித்த குற்றத்திற்காகவும் கைது செய்யப்பட்டு இன்றுவரை தமிழக சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள  ஈழத்தமிழர்கள் ,தமது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

மூன்று வருடங்களாக தடுத்த வைக்கப்பட்டுள்ள தாம், சிறப்பு முகாமில் விடுதலை கிடைக்குமா என்ற நம்பிக்கை இல்லாமல் வாழ்கிறோம்.நாம் எமது குடும்பங்களோடு சேர்ந்து வாழ உதவுங்கள் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்துள்ளனர்.

மேலும் நீதியற்ற சிறை அடைப்பிலிருந்து எங்களை வாழவிடுங்கள் ,அல்லது சாகவிடுங்கள் என தெரிவித்து ஆரம்பித்துள்ள குறித்த போராட்டத்தில் ,முழு ஆயுளையும் சிறைக்கம்பிக்குள் முடக்கி விடாதீர்,யார் கையில் உள்ளதோ எங்கள் வாழ்க்கையின் சாவி போன்ற வாசங்கங்களை போராட்ட இடத்தில பொறித்த வண்ணம் ,உண்ணாவிரதம் தொடர்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here