
தமிழனப்படுகொலையின் உச்சநாளான மே 18 நினைவின் 13 ஆண்டு பிரான்சின் பல நகரங்களில் கவனயீர்ப்புப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. 18.05.2022 பிரான்சின் வெளிமாவட்டங்களில் ஒன்றான நெவர் மாநகரத்தில் நெவர் தமிழ்ச்சோலையும், நெவர் பிராங்கோ தமிழ்ச்சங்கமும் இணைந்து பி. பகல் 3.00 மணிக்கு இந்நிகழ்வு நினைவு கூரப்பட்டது.




தொடர்ந்து பொதுச்சுடர் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கத்துடன் கவனயீர்ப்புப்போராட்டம் ஆரம்பமானது.





தொடர்ந்து பொதுமக்கள் மலர் வணக்கம், சுடர்வணக்கம் செலுத்தப்பட்டு இளையவர்களால் முள்ளிவாய்க்கால் நினைவுரை வாசிக்கப்பட்டு நிகழ்வு “தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்” என்ற முழக்கத்துடன் நிறைவுற்றது.