இந்த நாளினை நினைத்தாலே நெஞ்சுகனக்கும் இதயம் வெடிக்கும்!

0
190

முள்ளிவாய்க்கால்……..
கடற்கரை நிலவொளி
வைகாசி விட்டெறியும் உப்புக்காற்று
ரத்தங்களிலும் சதைகளிலும் எலும்புகளிலும்
ஆங்காங்கே சிதறியும் வெளித்தெரிந்தும் தெரியாமல் மண்ணோடுபோன என் உறவுகளின் உடலங்கள்
சப்பாத்து,சட்டி,பானை,சில்வர்,சீப்பு,கிழிந்தசேலை,உடைந்த மட் பாண்டங்கள்
இன்னும் பலவற்றினை
மூடிய வெண்மணல்களின் மேல்
நீளமாய் விரிக்கப்பட்ட தறப்பாளின் மீது நள்ளிரவு தாண்டியும் வலுக்கட்டாய நித்திரைக்காய் போராட்டம்…….

பதின்மூன்றாண்டுகளின் முன்னால் இதே நேரம் இந்தக்கணம் இந்த நிலம் எப்படியிருந்திருக்கும் எரியும் தணலிடை
அதிரும் வெடியிடை எங்கள் மண் சுவாசிக்கத்துடித்த இந்த நாளினை நினைத்தாலே நெஞ்சுகனக்கும்
இதயம் வெடிக்கும்………

இந்த நாளில் எப்படி வரும் தூக்கம்
கடலை வெறித்துப்பார்த்தபடி காத்திருக்கிறோம் நாளைய விடியலுக்காய்…!

எஸ்.தவபாலன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here