பிரான்ஸ்: பெண் பிரதமராக எலிசபெத் போர்ன் நியமனம்!

0
127

மக்ரோனின் புதிய அரசின் பிரதமராக
முன்னாள் தொழில் மற்றும் வேலை
வாய்ப்பு அமைச்சர் எலிசபெத் போர்ன்
நியமிக்கப்பட்டிருக்கிறார்.ஜீன் காஸ்ரோ
தனது பதவியில் இருந்து விலகியதை
அடுத்து எலிசபெத் போர்னின் பதவி
யேற்பு வைபவம் இன்று மாலை எலிஸே
மாளிகையில் நடைபெற்றது.

மே, 1991 இல் பிரான்ஷூவா மித்ரோன்
அரசாங்கத்தில் முதலாவது பெண் பிரத
மராக எடித் கிரெசன் (Edith Cresson) என்ப
வர் நியமிக்கப்பட்டார். அதன் பின்னர்
இரண்டாவது வாய்ப்பாக இப்போதுதான்
நாடு ஒரு பெண் பிரதமரைப் பெறுகிறது.

61 வயதுடைய (18 ஏப்ரல் 1961) எலிசபெத் போர்ன் சோசலிஸக் கட்சியின் முன்னாள் உறுப்பினராவார்.2017தேர்தல் சமயத்தில்
அவர் அதிபர் மக்ரோனுக்குத் தனது ஆதர
வை வெளிப்படுத்தியிருந்தார். அதன் பின் சோசலிஸக் கட்சியிலிருந்து விலகி
மக்ரோனின் La République En Marché கட்சி
யில் இணைந்தார்.

2019-2020 காலப்பகுதியில் சூழலியல்
மற்றும் உள்ளீடான மாற்றம் தொடர்பான
அமைச்சராகவும் 2017-2019 காலப் பகுதி
யில் போக்குவரத்து அமைச்சராகவும் 2020 க்குப் பின் தொழில் மற்றும் வேலை
வாய்ப்பு அமைச்சராகவும் எலிசபெத் போர்ன் பதவிவகித்திருந்தார்.

இதேவேளை, இன்று பதவி விலகிய
முன்னாள் பிரதமர் ஜீன் காஸ்ரோவுக்கு
அதிபர் மக்ரோன் உட்பட அரசியல் பிரமு
கர்கள் பலரும் வாழ்த்துக்களையும் நன்
றியையும் தெரிவித்துள்ளனர். நாடு
பெருந் தொற்று நோயின் பிடியில் சிக்
கியிருந்த சமயத்தில் பிரதமராகப் பதவி
யேற்று அரச நிர்வாகத்தை வழிநடத்திய
மைக்காகப் பலரும் அவரைப் புகழ்ந்து பாராட்டியுள்ளனர்.

        -பாரிஸிலிருந்து குமாரதாஸன்.
                                           16-05-2022

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here