பிரான்சு நோஸ்லி செக் நகரில் மே 18 இன் 13 ஆம் ஆண்டு கவனயீர்ப்பு நிகழ்வு!

0
247

தமிழனப்படுகொலையின் உச்சநாளான மே 18 நினைவின் 13 ஆண்டு பிரான்சின் பல நகரங்களில் கவனயீர்ப்புப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. 16.05.2022 பாரிசின் புறநகர்ப்பகுதியில் ஒன்றான நோஸ்லி செக் மாநகரத்தில் பிராங்கோ தமிழ்ச்சங்கத்தினரால் பி. பகல் 3.00 மணிக்கு இந்நிகழ்வு நினைவு கூரப்பட்டது. நிகழ்வில் மாநகரமுதல்வர் மற்றும் துணைமுதல்வர், அரசியல் பிரமுகர்கள் பல்லின மக்களும்  கலந்து கொண்டிருந்தனர்

தமிழனப்படுகொலையின் உச்சநாளான மே 18 நினைவின் 13 ஆண்டு பிரான்சின் பல நகரங்களில் கவனயீர்ப்புப்போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது.

பாரிசின் புறநகர்ப்பகுதியில் ஒன்றான நோஸ்லி செக் மாநகரத்தில் பிராங்கோ தமிழ்ச்சங்கத்தினரால் நேற்று திங்கட்கிழமை பி. பகல் 15.00 மணிக்கு இந்நிகழ்வு நினைவுகூரப்பட்டது.  

நிகழ்வில் மாநகரமுதல்வர் மற்றும் துணைமுதல்வர், அரசியல் பிரமுகர்கள் பல்லின மக்களும் கலந்து கொண்டிருந்தனர். பொதுநினைவுச்சுடரினை மாநகர முதல்வர் ஏற்றிவைக்க மாவீரர் குடும்ப உறவுகள் ஈகைச்சுடரினையும், மலர்வணக்கத்தையும் செய்திருந்தனர். அகவணக்கம் செய்யப்பட்டு. நினைவுரைகள் இடம்பெற்றன.

தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட இனப்படுகொலை பற்றியும் அதனை உச்சமாக புரிந்த மகிந்தராசபக்ச அரசு பற்றியும், இன்று அங்கு நடைபெறுகின்ற போராட்டம் பற்றியும் இதற்குக் காரணமான பௌத்த சிங்கள மதவாத அரசையும் அதன் ஆட்சியாளர்களையும், சர்வதேச நீதியின் முன்நிறுத்த வேண்டும் என்ற தமிழ் மக்களின் கோரிக்கையானது நியாயமானது என்றும் அவர்களோடு நோஸ்லே செக் மாநகரசபையும், மக்களும் எப்பொழுதும் உறுதுணையாக இருப்போம் என்று மாநகர முதல்வர் கூறியிருந்தார்.

இவர்கள் தொடர்ந்து தமிழ்மக்களின் நியாயப்பாட்டிற்காக அனைத்து இடங்களிலும் குரல் கொடுத்துவருபவர்கள் என்பது தமிழீழமே தமிழர்களுக்கான தீர்வாக அமையும் என்ற தீர்மானத்தையும் நிறைவேற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நோஸ்லிசெக் பிராங்கோ தமிழ்ச்சங்கமானது கல்வி, கலை, விளையாட்டு அரசியல் சமூகப்பணி என்ற அனைத்துவிடயங்களிலும் இம்மாநகரசபையோடு பயணித்து வரகின்றமை குறிப்பிடத்தக்கது. எந்த நோக்கத்தோடும், தூரநோக்கு சிந்தனையோடு பிராங்கோ தமிழ்ச்சங்கங்கள் உருவாக்கப்பட்டதோ அதனை கட்சிதமாக செயற்படுத்திவரும் தமிழ்ச்சங்கங்களில் நோஸ்லிசெக் தமிழ்சங்கமும், அங்கு வாழும் மக்களும் குறிப்பிடத்தக்கது.
-நன்றி ஊடகப்பிரிவு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here