சர்வதேச விசாரணையை வலியுறுத்தி நாளை மறுதினம் மன்னாரில் கையெழுத்து வேட்டை!

0
175

11988426_662195630583302_5379282992283857393_nசர்வதேச விசாரணையை வலியுறுத்தி நாளை மறுதினம் மன்னாரில் மாபெரும் கையெழுத்து வேட்டை இடம்பெறவுள்ளதாக மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை இம்மானுவேல் செபமாலை அடிகளார் தெரிவித்துள்ளார்.

மன்னார் பிரஜைகள் குழுவும், வடமாகாண காணாமல் ஆக்கப்பட்டவர்களது குடும்பங்களின் சங்கமும் இணைந்து சர்வதேச விசாரணையை கோரி வருகின்றோம். உள்ளக விசாரணைகளில் எந்த விதமான நம்பிக்கையும் இல்லை ஆகவே எங்களுக்கு சர்வதேச தரத்திலான ஒரு விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என கோரியிருந்தோம்.

சர்வதேச விசாரணையை வலுப்படுத்தும் முகமாக மன்னார் பிரஜைகள் குழுவும், சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறையும், தமிழர் செயற்பாட்டுக் குழுவும் இணைந்து மன்னார் மாவட்டத்தில் நாளை மறுதினம் மன்னார் மாவட்டச் செயலக பிரதான வீதிக்கு அருகில் காலை 10 மணியளவில் கையெழுத்து வேட்டை இடம்பெறவுள்ளது.

மேலும் இதற்கு ஆதரவாக அனைத்து மக்களும் கையெழுத்து வேட்டையில் கலந்து கொண்டு சர்வதேச விசாரணையை வலியுறுத்த வேண்டும். மக்களின் நீதிக்கான பயணத்திற்கு சர்வதேச விசாரணை ஒன்று தான் நீதியை பெற்றுத்தர முடியும் என்ற நோக்கத்துடன் உங்களுடைய ஒத்துழைப்பை வழங்க வேண்டும். என அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here