வடமராட்சியில் தமிழீழ தேசியத் தலைவரின் இல்லத்தில் இருந்து மே18 பேரணி ஆரம்பம்!

0
87

யாழ்.வடமராட்சி வல்வெட்டித்துறையில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் வீட்டின் முன்றலில் இருந்து முள்ளிவாய்க்கால் மே 18 எழுச்சிப் பேரணி இன்று ஆரம்பமாகியது.

வல்வெட்டித்துறையில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட பேரணியானது நடைபவனியாக பருத்தித்துறை, நெல்லியடி, அச்சுவேலி,நல்லூர் கந்தசாமி
ஆலயம் யாழ் பல்கலைக்கழகம் ஊடாக, யாழ் நகரத்தை வந்தடைந்து, ஏ9 பிரதான வீதியூடாக கிளிநொச்சியைச் சென்றடையவுள்ளது.

அங்கிருந்து மே 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலைச் சென்றடையும் என பேரணி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here