பிரான்சு பொபினி நகரில் தமிழின அழிப்பு மே 18 முள்ளிவாய்க்கால் 13ஆம் ஆண்டு நினைவேந்தல் !

0
365

15.05.2022 தமிழின அழிப்பு மே 18 முள்ளிவாய்க்கால் 13 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகளும், கவனயீர்ப்புப் போராட்டங்களும் பிரான்சில் பல இடங்களில் நடைபெற்று வருகின்றது. இன்றுக்ஷ15.05.2022  பாரிசின் புறநகர் பகுதியில் ஒன்றான தமிழ் மக்கள் அதிகம் வாழும் பொபினி மாநகரத்தில் மாநகரசபை மண்டபத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.

மாநகர உதவிமுதல்வர் ரஞ்சித் சிங் அவர்கள் நினைவு முதல் சுடரினை ஏற்றி வைத்து மலர் வணக்கம் செலுத்தியதோடு, இனப்படுகொலையில் உயிர் ஈந்த மக்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்று தமிழ் மக்கள் நிம்மதியாக சுதந்திரமாக வாழ அவர்களுக்கு ஒரு நாடு கிடைக்க வேண்டும், உரிமை கிடைக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

தொடர்ந்து பொபினி பிராங்கோ தமிழ்ச்சங்கத் தலைவர் திரு. நந்தகுமார் அவர்கள் மற்றும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் மற்றும் பொபினி பிரதேச மக்கள், இளையவர்கள், குழந்தைகள் பெரியவர்களுடன் பிரெஞ்சு மக்களும் பங்குபற்றினர். தாயகத்திலிருந்து வீரம் செறிந்த முள்ளிவாய்க்கால் மண் வரவழைக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. வந்திருந்த மக்கள் கண்ணீர் சிந்தி அதனைத் தொட்டும் வணங்கியும் சென்றனர். பிரான்சு தேசத்தில் எதிர்வரும் யூன் மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் பரப்புரைகளுக்கு மத்தியில் நகரபிதா வருகை தந்திருந்ததுடன் நினைவுப்படத்திற்கு சுடர் ஏற்றியும் , மலர்வணக்கமும் செலுத்தியிருந்தார் என்பது குறிபிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here