பொத்துவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரையிலான பேரணி ஆரம்பம்!

0
173

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் முள்ளிவாய்க்காலில் இன்னுயிர்களை ஈத்த உறவுகளுக்கான முள்ளிவாய்க்கால் படுகொலை வாரம் அனுஸ்டிக்கப்பட்டுவருவதுடன் இன்று பொத்துவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரையில் பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு மாகாண வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் அம்பாறை மாவட்ட தலைவி தம்பிராசா செல்வராணி தலைமையில் பொத்துவில் பிரதேசசபைக்கு முன்பாக ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது.

பேரணியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள்,சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள்,மதத்தலைவர்கள் கலந்துகொண்டு ஆதரவு வழங்கிவருகின்றனர்.

இன்று காலை ஆரம்பமான இந்த பேரணியானது திருக்கோவில், அக்கரைப்பற்று, கல்முனை, களுவாஞ்சிகுடி ஊடாக கல்லடி பாலம் வரையில் வருகைதந்து மட்டக்களப்பிற்கு வருகை தரவுள்ளது.

இதேவேளை நாளைய தினம் மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை நோக்கி பயணம் அமையும். 17ஆம் திகதி திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவினை சென்றடைந்து 18ஆம் திகதி முல்லைதீவிலிருந்து முள்ளிவாய்க்காலுக்கு சென்று அங்கு உயிர்நீர்த்த,படுகொலைசெய்யப்பட்ட உறவுகளின் நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டு நினைவேந்தல் வாரம் முடிவுக்கு கொண்டுவரப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here