முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில், தென் பகுதி இளைஞர்களும் இணைந்துகொண்டு, தமிழ்ப்பகுதிகளில் நிகழ்த்தப்பட்ட அநீதிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அழைப்பு விடுத்துள்ளார்.
வவுனியாவில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.