மட்டு.மயிலந்தனை படுகொலை பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி நினைவேந்தல்!

0
168

முள்ளிவாய்க்கால் படுகொலையினை நினைவுகூரும் வகையில் முன்னெடுக்கப்படும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரத்தின் மூன்றாவது தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.

கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் மீது முன்னெடுக்கப்பட்ட படுகொலைகளையும் இணைத்து நினைவேந்தல் வார நிகழ்வுகளை தமிழ் தேசிய மக்கள் முன்னணி முன்னெடுத்துவருகின்றது.

இதன்கீழ் மட்டக்களப்பின் எல்லைப் புறப்பகுதியாக கருதப்படும் மயிலந்தனை படுகொலை நடைபெற்ற பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி நினைவேந்தல் நிகழ்வு இன்று நடாத்தப்பட்டது.

மயிலந்தனை பகுதியில் ஒரு நாளில் 36பேர் இராணுவத்தினரால் வெட்டிக்கொலைசெய்யப்பட்டதாகவும் இது தொடர்பில் உரிய இராணுவத்தினருக்கு எதிராக கொழும்பு உச்ச நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இதுவரையில் நீதி கிடைக்காத நிலையில் இன்றைய தினம் அங்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி வார நிகழ்வு அனுஸ்டிக்கப்பட்டது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கோறளைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் கு.குணசேகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது கஞ்சி செய்யப்பட்டு முள்ளிவாய்க்காலில் உயிர்நீர்த்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் ஈகசுடரும் ஏற்றப்பட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி பொதுமக்களுக்கு பகிரப்பட்டது.

இதேவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பு தமக்கு தமிழ் மக்களால் வழங்கப்பட்ட பொறுப்பை சரியான முறையில் செய்யாமல் சர்வதேசத்தின் எடுபிடிகளாக செயற்பட்டதன் காரணமாக தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலை தொடர்பான விவகாரங்களை முன்கொண்டுசெல்ல தவறிவிட்டதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here