செம்மலைக் கடலில் காணாமல் போன மூத்த சகோதரனின் சடலமும் இன்று மீட்பு!

0
175

முல்லைத்தீவு செம்மலைக்கடலில் குளிக்க சென்ற மூன்று சகோதரர்கள் கடலில் மூழ்கி காணாமல் போயிருந்த நிலையில் 3 ஆவது மற்றும் 2 ஆவது சகோதரர்களின் சடலம் மீட்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்ட நிலையில் இன்று காலை முதலாவது சகோதரனின் சடலம் மீட்கப்படுள்ளது,

முல்லைத்தீவு செம்மலை பிள்ளையார் கோவிலுக்கு நேரே உள்ள கடலில் கடந்த 10.05.2022 மாலை 2.00 மணியளவில் கடலில் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன் இரண்டு தம்பிகள் கடலில் மூழ்கி காணாமல் போயிருந்தார்கள்.

அளம்பில் பகுதியினைச் சேந்த பத்மநாதன் என்று அழைக்கப்படுபவரின் பிள்ளைகளான மூன்று ஆண் பிள்ளைகளுமே கடகில் மூழ்கி காணாமல் போயிருந்த நிலையில் 3 ஆவது மற்றும் 2 ஆவது சகோதரர்களின் சடலம் நேற்று முன்தினம் நாயாற்று கடற்கரை பகுதியில் மீட்கப்பட்டது,

.

அளம்பில் பகுதியைச் சேர்ந்த 9 இளைஞர்கள் கடலில் குளிப்பதற்காக சென்றுள்ளார்கள் இதன் போதே மூவர் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தார்கள்.

அளம்பில் பகுதியினை சேர்ந்த ஒரேகுடும்பத்தினைச் சேர்ந்த 29 அகவையுடைய பத்மநாதன் கிளின்ரன், 26 அகவையுடைய பத்மநாதன் விஜித், 23 அகவையுடைய பத்மநாதன் விழிந்திரன் ஆகிய மூன்று சகோதரர்களே கடலில் காணாமல் போயிருந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டனர்,

அன்றைய இரவாகியும் 9.00 மணிவரையும் எதுவும் கிடைக்காத நிலையில் பிரதேச இளைஞர்கள், கிராம மக்கள், மீனவர்கள் தேடும் நடவடிக்கையினை முன்னெடுத்து வந்த நிலையில் நேற்று முன்தினம் காலை 3 ஆவது சகோதரனின் சடலமும் 2 ஆவது சகோதரனின் சடலமும் மீட்கப்பட்டது,

சற்று முன்னர் முதலாவது சகோதரனின் சடலம் குளித்த இடத்தில் பாறைக்குள் சிக்குண்டு உருக்குலைந்த நிலையில் மீனவர்களின் பெரும் முயற்சியால் மீட்கப்பட்டுள்ளது,

இச்சம்பவமானது அப்பகுதி மக்களை பெரும் துயரில் ஆழ்த்தியுள்ளது,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here