சுவீடன், பின்லாந்து தாக்கப்பட்டால் பிரிட்டன் தலையிட்டு பாதுகாக்கும்!

0
107

இரு நாடுகளின் தலைவர்களுடன்
ஜோன்சன் பாதுகாப்புப் பிரகடனம்

சுவீடன், பின்லாந்து நாடுகளுக்கு விஜ
யம் மேற்கொண்ட பிரிட்டிஷ் பிரதமர்
பொறிஸ் ஜோன்சன், இரு நாட்டுத் தலை
வர்களுடனும் பாதுகாப்புப் பிரகடனங்க
ளைச் செய்துள்ளார். இவ்விரு நாடுகளும்
தாக்குதலுக்கு இலக்காகும் பட்சத்தில்
லண்டன் உடனடியாகத் தலையிட்டுப்
பாதுகாப்பதை அந்தப் பிரகடனங்கள்
உறுதிப்படுத்துகின்றன. பின்லாந்து
அதிபர் சவுலி நினிஸ்டோ(Sauli Niinistö)
சுவீடிஷ் பிரதமர் மாக்டலேனா அண்டர்
சன் (Magdalena Anderson) ஆகிய இருவ
ரையும் தனித்தனியே சந்தித்த பொறிஸ்
ஜோன்சன், பாதுகாப்பு உத்தரவாதங்
களை வழங்கினார்.

பால்டிக் பிராந்தியத்தில் போர்ப் பதற்றம்
அதிகரித்துவருகிறது.ரஷ்யாவோடு எல்
லையைக் கொண்ட பின்லாந்தும் பால்
டிக் கடலில் கேந்திர முக்கியத்துவத்தைக் கொண்டுள்ள சுவீடனும் நேட்டோ அமைப்
பில் இணைந்துகொள்வதற்கான பரிசீல
களில் ஈடுபட்டுள்ளன. நீண்ட காலமாகப் போர்களின் போது எந்தப் பக்கமும் சாராமல் நடுநிலை (wartime neutrality) வகித்து வந்த இவ்விரு நாடுகளும் உக்
ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்
பையடுத்து நேட்டோ அமைப்பில் சேர்வ
தற்கான ஆர்வத்தை வெளிப்படுத்தி வரு
கின்றன. அவ்வாறு மேற்குலக கூட்டணி
யுடன் இணைந்தால் எதிர்விளைவுகளை
சந்திக்க நேரிடும் என்று ரஷ்யா எச்சரித்து
வருகிறது. அதனால் இவ்விரு நோட்டிக் நாடுகளி லும் முன்னொருபோதும் இருந்
திராத பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலைமை
நீடித்துவருகிறது.

(படம் : சுவிடிஷ் பிரதமர் மாக்டலேனா அண்டர்சனுடன் பொறிஸ் ஜோன்சன்)


        -பாரிஸிலிருந்து குமாரதாஸன்.
                                           12-05-2022

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here