தமிழ் இனம் மீண்டும் எழுந்திட முடியுமா?
2009இல் முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதை தமிழ் இனம் மறந்துவிட வேண்டும் என இலங்கை இந்திய அரசுகள் விரும்புகின்றன.
“வடக்கின் வசந்தம்” மூலம் கார்பெட் றோட் போட்டுக்கொடுத்தால் இனப்படுகொலையை தமிழ் மக்கள் மறந்துவிடுவார்கள் என மகிந்த ராஜபச்ச நினைத்தார்.
50 ஆயிரம் வீடு கட்டித் தருவதாக கூறினால் இனப் படுகொலையை தமிழ் மக்கள் மறந்துவிடுவார்கள் என இந்திய அரசு நினைத்தது.
சுமந்திரனை விலைக்கு வாங்குவதன் மூலம் இனப் படுகொலையை வெறும் போர்க்குற்றமாக தமிழ் மக்கள் மனங்களில் மாற்றிவிட முடியும் என நல்லாட்சி அரசு நினைத்தது.
ஆனால் ஆண்டு செல்ல செல்ல தமிழ்மக்கள் மறப்பதற்கு பதிலாக இன்னும் அதிகம் அதிகமாக அதனை நினைவில் கொள்கிறார்கள் என்பதே உண்மை.
ஆரம்பத்தில் ஈழத் தமிழர்கள் மட்டுமே முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நினைவு கூர்ந்தனர். ஆனால் இன்று தமிழக தமிழர்கள், மலேசிய சிங்கப்பூர் தமிழர்கள் எல்லோரும் இதனை நினைவில் கொள்கின்றனர்.
புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒவ்வொரு ஆண்டும் இந் நாட்களில் முள்ளிவாய்க்கால் படுகொலைகளை மற்ற இன மக்கள் மத்தியில் கொண்டு செல்கிறார்கள்.
புலம்பெயர் நாட்டில் பிறந்து வளரும் எமது அடுத்த சந்ததியினர் முள்ளிவாய்க்கால் படுகொலைக்கான நீதியைக் கோராமல் இருந்துவிட மாட்டார்கள்.
ஜ
ஐ.நாவில் ஈழத் தமிழருக்கான நீதி கிடைக்காமல் போகலாம். ஆனால், உலக மக்கள் இந்த அடுத்த சந்ததியினரின் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் இருக்க முடியாது.
தமிழ் மக்களை ஆயிரக் கணக்கில் கொன்றது மட்டுமன்றி அவர்களை தமிழ் மக்கள் நினைவு கூருவதையும் அச்சுறுத்தி அடக்க முனைகிறது இலங்கை அரசு.
இலங்கையில் அடக்கலாம். ஆனால் புலம்பெயர்ந்த தமிழர்களை அடக்க முடியுமா? முடியவே முடியாது.
அனைவரும் ஒருமித்து நினைவுகூர்வதன் மூலம் “தமிழ் மக்கள் மீண்டும் எழுந்து விட்டார்கள்” என்ற செய்தியை உலகிற்கு தெரியப்படுத்துவோம்.
தோழர் பாலன்