இராஜாங்கத் திணைக்களம் தெரிவிப்பு
இலங்கை அரசியல்வாதிகள் எவரும்
இந்தியாவுக்கு வெளியேறவில்லை!
கொழும்புத் தூதரக ருவீற்றர் மறுப்பு
சிறிலங்கா அரசியல் பிரமுகர்கள், அவர்
களது குடும்ப உறுப்பினர்கள் எவரும்
இந்தியாவுக்கு வெளியேறவில்லை. அது
தொடர்பாகச் சில செய்தி நிறுவனங்கள்
சமூகவலைத் தளங்களில் பரப்பப்படுகி
ன்ற தகவல்கள் உண்மைக்குப் புறம்பான
போலிச் செய்திகள் என்று கொழும்பில்
உள்ள இந்தியத் தூதரகம் அதன் ருவீற்
றர் பதிவில் தெரிவித்துள்ளது.
இலங்கை அரச பிரமுகர்கள் எதிர்ப்புக்கு அஞ்சி இந்தியாவுக்கு வருவது அங்கும்
அமைதி இன்மையையும் ஆர்ப்பாட்டங்க
ளையும் பரவச்செய்து விடலாம் என்று
இந்திய அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.
இதேவேளை, பாரதீய ஜனதா கட்சி உறுப்
பினர் சுப்ரமணியன் சுவாமி, இலங்கை
யைப் பெயர் குறிப்பிடாமல் இந்தியா
தனது படைகளைக் கலவரப் பகுதிக்கு
அனுப்ப வேண்டும் என்று பதிவிட்டிருக்கி
றார்.
“இந்திய எதிர்ப்பு வெளிநாட்டுச் சக்திகள்
மக்களின் கோபத்தைத் தங்களுக்குச்
சாதகமாகப் பயன்படுத்திவருவது இந்தி
யாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்
தலானது. எனவே இந்தியா அரசமைப்
பின் ஆட்சியை உறுதி செய்வதற்காகத்
தனது படைகளை அனுப்பவேண்டும்”
-இவ்வாறு சுப்ரமணியன் சாமி தனது
பதிவில் எழுதியுள்ளார். அவரது இந்தக்
கருத்து சமூகவலைத் தளங்களில் கடும்
விமர்சனங்களைச் சந்தித்துள்ளது.
இந்திய ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினராகிய சுவாமி, மஹிந்த ராஜ
பக்சவுக்கு மிக நெருக்கமான கூட்டாளி
ஆவார்.
🔵அமெரிக்கா கவலை
இதேவேளை, சிறிலங்காவில் சட்டம் ஒழுங்கு பேணும் பணிக்கு இராணுவம் ஈடுபடுத்தப்படுவது குறித்து அமெரிக்கா
கவலை வெளியிட்டுள்ளது.
“அமைதி வழிகளில் எதிர்ப்பைத் தெரிவிப்போர் இராணுவத்தினால் அல்லது சிவிலியன் பிரிவின் தரப்பில் வன்முறை அல்லது அச்சுறுத்தலுக்கு ஆளாகக்கூடாது என்பதை நாங்கள் அடிக்கோடிட்டுக் காட்டுகிறோம்,” என்று அமெரிக்க ராஜாங்க அமைச்சின் செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ்
(Ned Price) தெரிவித்திருக்கிறார்.
“இன்னும் பரந்த அளவில், கடந்த சில நாட்களாக இலங்கையில் அதிகரித்து வரும் வன்முறைச் சம்பவங்கள் குறித்து நாங்கள் மிகவும் கவலையடைந்துள்
ளோம். நான் முன்பு கூறியது போல் அமைதியான போராட்டக்காரர்களுக்கு எதிரான வன்முறையை நாங்கள் கண்டிக்கிறோம். வன்முறைச் செயல்
களைத் தூண்டும் மற்றும் ஈடுபடும் எவரையும் முழு விசாரணைக்குட்படுத்
திக் கைது செய்து, வழக்குத் தொடரு
மாறு கேட்டுக்கொள்கிறோம். நான் முன்பு கூறியது போல், துருப்புக்களின் நிலைப்பாட்டை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம், அது எங்களுக்குக் கவலை அளிக்கிறது, மேலும் பிரதமர் ராஜினாமா செய்த பின்னர் இலங்கையில் நிலவும் அரசியல் முன்னேற்றங்கள் மற்றும் நிலைமை
களை நாங்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம்.”
-இவ்வாறு அவர் மேலும் தெரிவித்துள்
ளார்.
படம் :ராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் நெட் பிரைஸ்.
குமாரதாஸன். 11-05-2022
பாரிஸ்.