முல்லைத்தீவு செம்மலைக்கடலில் குளிக்க சென்ற மூன்று சகோதரர்கள் கடலில் மூழ்கி காணாமல் போயிருந்த நிலையில் 3 ஆவது மற்றும் 2 ஆவது சகோதரர்களின் சடலம் மீட்கப்படுள்ளது,
முல்லைத்தீவு செம்மலை பிள்ளையார் கோவிலுக்கு நேரே உள்ள கடலில் நேற்று 10.05.2022 மாலை 2.00 மணியளவில் கடலில் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த அண்ணன் இரண்டு தம்பிகள் கடலில் மூழ்கி காணாமல் போயிருந்தனர்.
அளம்பில் பகுதியினை சேந்த நாதன் என்று அழைக்கப்படுபவரின் பிள்ளைகளான மூன்று ஆண் பிள்ளைகளுமே கடகில் மூழ்கி காணாமல் போயிருந்த நிலையில் 3 ஆவது மற்றும் 2 ஆவது சகோதரர்களின் சடலம் நாயாற்று கடற்கரைப் பகுதியில் மீட்கப்பட்டுள்ளது,
சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு காவல்துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டுள்ளதுடன் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்துள்ளார்கள்.
அளம்பில் பகுதியைச் சேர்ந்த 9 இளைஞர்கள் கடலில் குளிப்பதற்காக சென்றுள்ளார்கள் இதன் போது மூவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்கள்.
அளம்பில் பகுதியினை சேர்ந்த ஒரேகுடும்பத்தினை சேர்ந்த 29 அகவையுடைய பத்மநாதன் கிளின்ரன், 26 அகவையுடைய பத்மநாதன் விஜித், 23 அகவையுடைய பத்மநாதன் விழிந்திரன் ஆகிய மூன்று சகோதரர்களே கடலில் காணாமல் போன நிலையில் தேடும்பணியில் மீனவர்கள் ஈடுபட்டனர்,
நேற்று இரவாகியும் 9.00 மணிவரையும் எதுவும் கிடைக்காத நிலையில் பிரதேச இளைஞர்கள், கிராம மக்கள், மீனவர்கள் தேடும் நடவடிக்கையினை முன்னெடுத்து வந்த நிலையில் இன்று காலை 3 ஆவது சகோதரனின் சடலமும் சற்று முன்னர் 2 ஆவது சகோதரனின் சடலமும் மீட்கப்படுள்ளது,
இச்சம்பவமானது அப்பகுதி மக்களை பெரும் துயரில் ஆழ்த்தியுள்ளது,
முதலாவது சகோதரனின் சடலத்தை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன, பெருமளவான பொதுமக்கள் கடற்கரையில் காத்திருப்பதைக் காணமுடிகிறது,