நீர்கொழும்பு பெரியமுல்லை மற்றும் கட்டுவாபிட்டிய பகுதியில் பிரபல ஹோட்டல் ஒன்று தீ வைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் அரசியல் வாதிகளின் பின்புலத்துடன் அப்பகுதி முஸ்லிம்களின் கடைகள் மற்றும் வீடுகள் மீதும் காடையர்கள் இன்று மாலை தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அசம்பாவிதத்தில் இதுவரை 4 பேர் வெட்டு காயங்களுக்கு ஆளாகி மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளனர்.
நிலைமைகளை வேண்டுமென்றே பாதகமான நிலைக்குத் திசைதிருப்பி அமைதியைக் கெடுத்து குளிர்காய தீய சக்திகள் மீண்டும் சூழ்ச்சிகள் செய்ய முயற்சிக்கின்றனர்.
எனவே நாட்டினதும், மக்களினதும் பாதுகாப்பு கருதி தமிழர்கள் முடிந்தவரை அமைதியைப் பேணுமாறு கேட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொதுசொத்துகளை சேதப்படுத்துவோர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள முப்படைக்கும் பாதுகாப்பு அமைச்சு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
அத்தோடு ஊரடங்குச் சட்டம் நாளை மறுதினம் காலை முதல் நீடிக்கப்பட்டுள்ளது.