ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொலனறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள நேற்று இடம்பெற்ற போராட்ட களத்தில் உயிரிழந்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள , நிட்டம்புவை பிரதேசத்தில் ஆர்ப்பாட்டக் காரர்களால் முற்றுகையிடப்பட்ட நிலையில் தனது கைத் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை அவரது மெய்ப் பாதுகாவலரும் இவ்வாறே உயிரிழந்துள்ளார் எனத் தெரியவருகிறது.