தன்னைத் தானே சுட்டுக்கொண்டு
உயிர் மாய்த்தார் அரச கட்சி எம்.பி?
🔴நூற்றுக்கு மேற்பட்டோர் காயம்!!!!
சிறிலங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்சவி
னால் தூண்டப்பட்டவர்கள் எனக்கூறப்ப
டும் அவரது ஆதரவாளர்கள் ஆரம்பித்த
வன்முறைகள் தலைநகர் கொழும்பு உட்
பட நாட்டின் பல நகரங்களுக்கும் பரவி
யுள்ளன.நாடு முழுவதும் பொலீஸ் ஊர
டங்கு அமுலுக்குக் கொண்டுவரப்பட்டுள்
ளது.
கொழும்பில் காலி முகத் திடலில் கடந்த பல வாரங்களாக அரசு எதிர்ப்பு நடவடிக்
கைகளில் ஈடுபட்டு வந்தவர்கள்மீது பிரத
மரது ஆதரவாளர்கள் எனக் கூறப்படு
கின்ற கும்பல்களினால் இன்று ஆரம்பிக்
கப்பட்ட தாக்குதல்களே பெரும் கலவர
மாகப் பல இடங்களுக்கும் பரவியுள்ளது.
மஹிந்த குடும்பத்தின் ஆதரவாளர்கள் மற்றும் அவருக்கு மிக நெருக்கமான அரசியல் பிரமுகர்கள் பலரது வதிவிடங்
கள் தாக்கப்பட்டும் எரிக்கப்பட்டும் உள்
ளன.வீடுகள் எரிக்கப்படுகின்ற காட்சி
களும் வீதிகளில் பலர் நிர்வாண நிலை
யில் தாக்கப்படுகின்ற வீடியோக்களும்
சமூகவலைத் தளங்களில் பகிரப்பட்டு
வருகின்றன.
சிறிலங்காவில் கடந்த ஏப்ரலில் ஆரம்
பித்த அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின்
விளைவாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச
பதவி விலகியிருக்கிறார்.அவரது ராஜி
னாமா கடிதம் நாட்டின் அதிபர் கோட்டா
பய ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டிருப்
பதாக அறிவிக்கப்படுகிறது ஆனால் அவ
ரது விலகலை அதிபரும் இளைய சகோத
ரருமாகிய கோட்டாபய ஏற்றுக்கொண்
டாரா என்பது உறுதியாகத் தெரியவரவி
ல்லை.
ராஜபக்ச பதவி விலகுவதற்கு முன்னராக
நாட்டின் பிற பகுதிகளில் இருந்து அவ
ரால் பஸ்களில் தலைநகருக்கு அழைக்
கப்பட்டவர்கள் எனக் கூறப்படும் ஆயிரக்
கணக்கான ஆதரவாளர்கள் அங்கு ஏற்
கனவே பல நாள் அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்
டத்தில் ஈடுபட்டிருப்போர் மீது மிலேச்சத்
தனமான தாக்குதல்களைத் தொடுத்தனர்
என்று கூறப்படுகிறது.
பரவலாக நடைபெற்ற வன்முறைகளில்
அரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்
ஒருவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ள
னர். 150 பேர் காயங்களுடன் மருத்துவ
மனைகளில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.
பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளு
மன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துக்
கொறள என்பவரே உயிரிழந்திருக்கி
றார். அவர் எவ்வாறு உயிரிழந்தார் என்பது இன்னமும் தெளிவாகத் தெரிய வரவில்லை. கொழும்பில் உள்ள ஏஎப்பி, மற்றும் இந்திய ஊடகங்களின் செய்தி யாளர்களது தகவலின் படி அவர் ஆர்ப்
பாட்டக்காரர்களின் முற்றுகைக்குள் சிக்கிய நிலையில் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு உயிரை மாய்த்துள்ளார் என்று தெரியவந்துள்ளது. முன்னதாக
அவரது வாகனத்தில் இருந்து நடத்தப்
பட்டதாகக் கூறப்படும் துப்பாக்கிச் சூட்
டில் ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் காயம
டைந்தனர். அவர்களில் ஒருவர் பின்னர்
உயிரிழந்தார். அதனால் ஆத்திரமடைந்த
நூற்றுக்கணக்கானோர் நாடாளுமன்ற
உறுப்பினர் அமரகீர்த்தி தங்கியிருந்த
இடத்தை முற்றுகையிட்டனர் என்றும்
அச்சமயத்திலேயே அவர் தனது கைத் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக்
கொண்டார் என்றும் கூறப்படுகிறது.
வன்முறைகளில் ஈடுபட்ட மஹிந்தவின்
ஆதரவாளர்கள் கொழும்பில் இருந்து
தப்பிச் செல்வதைத் தடுப்பதற்காக ஆர்ப்
பாட்டக்காரர்கள் வாகனங்களைச் சோத
னையிட்டு ஆட்களைத் தேடிவருகின்றனர்
என்றும் கொழும்பிலும் புறநகரங்களிலும்
பெரும் பதற்றம் நீடிப்பதாகவும்அங்குள்ள
சில செய்தியாளர்கள் கூறுகின்றனர்.
கொழும்பு விமான நிலையத்துக்குச்
செல்லும் பயணிகள் தங்கள் பயண
ரிக்கட்டுகளைக் காண்பித்து பொலீஸ்
சோதனை நிலையங்களைத் தாண்டிச்
செல்ல முடியும் என்று சிறிலங்கன் விமானசேவை தெரிவித்துள்ளது.
குமாரதாஸன். 09-05-2022
பாரிஸ்.