
உக்ரைனின் மரியுபோல் நகரில் முற்றுகையில் உள்ள அசொவ்ஸ்டால் உருக்காலையில் இருந்து வயதானவர்கள், சிறுவர்கள் மற்றும் பெண்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டதாக ரஷ்யா மற்றும் உக்ரைன் தெரிவித்துள்ளன.
அங்கிருக்கும் மக்களை வெளியேற்றும் நடவடிக்கை ஐ.நா மற்றும் செஞ்சிலுவை சங்கத்தின் ஒருங்கிணைப்போடு ஒரு வாரத்துக்கு முன் ஆரம்பிக்கப்பட்டது.
மரியுபோல் நகர் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் வந்தபோதும் இந்த உருக்காலையை உக்ரைனிய படை தொடர்ந்து தக்கவைத்துள்ளது. இங்கு ரஷ்யா கடும் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
கடந்த சில வாரங்களாக இந்த உருக்காலையை முற்றுகையில் வைத்திருக்கும் ரஷ்யா, உக்ரைனிய படைகளை சரணடையும்படி அழுத்தம் கொடுத்து வருகிறது.
இந்நிலையில் மரியுபோலில் இருந்து இராணுவத்தினரை வெளியேற்றுவது தொடர்பிலான இராஜதந்திர முயற்சிகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக உக்ரைன் ஜனாதிபதி வெலோடிமிர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் படையெடுப்பில் மரியுபோல் நகரை கைப்பற்றுவது ரஷ்யாவுக்கு தீர்க்கமான வெற்றியாக கருதப்படுகிறது.