இந்திய மீனவர்களை விடுவிக்கக் கோரி இராமேஷ்வரத்தில் தொடரும் வேலைநிறுத்தப் போராட்டம்!

0
184

06THRAMESWARAMBOATS_943387fஇலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி இராமேஷ்வரத்தின் ஆரம்பிக்கப்பட்ட காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சிறு மீன்பிடி படகுகளை தவிர பாரிய அளவிலான படகுகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை இந்திய மீனவர் நலன்புரி அமைப்பின் இந்திய தலைவர் தேவதாசன் தெரிவித்துள்ளார்.

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவதாக தெரிவித்து இருநாட்டு மீனவர்களும் கைது செய்யப்படுவதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் கடந்த 31 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ள 16 மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழக மீனவர்கள் காலவரையறையற்ற வேலைநிறுத்தத்தை ஆரம்பித்துள்ளதாகவும் தேவதாசன் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் கடந்த மாதம் 31 ஆம் திகதி இந்திய மீனவர்கள் 9 பேரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மீனவர்களின் 3 டோலர் படகுகளும் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

இராமநாதபுரத்தை சேர்ந்த 3 மீனவர்களும் கோட்டை பட்டிணத்தை சேர்ந்த 4 மீனவர்களும் நாகபட்டிணத்தை சேர்ந்த 9 மீனவர்களுமே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here