
அலரிமாளிகைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தரப்பினர் கோட்டா கோ கம நோக்கி முன்னேறியுள்ள நிலையில், கோட்டா கோ கமவில் அமைக்கப்பட்டிருந்த சில கூடாரங்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதுடன் சில கூடாரங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கோட்டா கோ கமவில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

இந்நிலையில் ஏற்கெனவே கோட்டா கோ கமவில் அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வந்த ஒரு மாத போராட்டமானது இரத்தகளரியுடன் நிறைவடையவுள்ளதாக கோட்டா கோ கம போராட்டத்தின் ஏற்பாட்டளர்களில் ஒருவருமான ரெட்டா என்ற ரசிது சேனாரத்ன தனது சமூக வளைத்தளங்களில் தெரிவித்துள்ளார்.
கோட்டா கோ கம போராட்டத்தை முடக்குவதற்காக குண்டர்கள் களமிறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர்களது கைகளில் கற்களையும் தடிகளையும் காணக்கூடியதாக உள்ளதாக சமூக செயற்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.
கோட்டா கோ கம பிரதேசத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் அவ்விடத்துக்கு வருகை தந்த எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, எரான் விக்ரம ரத்ன ஆகியோர் மீது மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் எதிர்க் கட்சி தலைவர் அவரது வாகனத்தில் ஏற்றி அனுப்பப்பட்டுள்ளார்.
மைனா கோ கம, கோட்டா கோ கமவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் காயமடைந்த 15 பேர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் பொலிஸாரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.








