ஐரோப்பாவின் விமான நிலையங்களில்
கடந்த சில நாட்களாக பயணிகள் நெருக்
கடி காணப்படுவதாகச் செய்திகள் வெளி
யாகியுள்ளன. பிரான்ஸ் உட்பட ஐரோப்
பிய நாடுகளை நோக்கி உல்லாசப்பயணி
கள் வருகை திடீரென இந்த மாதம் அதிகரித்திருப்பதே இந்த நெருக்கடிக்குக்
காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது.
தொற்று நோய்க் காலத்தில் விமானத்
துறையும் சுற்றுலாவும் முடங்கியதால்
விமான நிலையங்களில் ஊழியர் படை
யைக் குறைக்கும் கட்டாயம் நிர்வாகங்
களுக்கு ஏற்பட்டது. அவ்வாறு குறைந்த எண்ணிக்கையான ஆளணியினருடன் செயற்பட்ட ஐரோப்பிய விமான நிலை
யங்கள் சில தற்போதைய திடீர் பயணி
கள் அதிகரிப்பை (sudden” influx of trave
lers) எதிர்கொள்ள முடியாது திண்டாடு
கின்றன.
நெதர்லாந்தின் ஷிப்போல் (Schiphol) விமான நிலையத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட நெரிசல் நெருக்கடியைஅடுத்து
விமான சேவைகள் பல ரத்துச் செய்யப்
பட்டன. நிதி நெருக்கடியால் ஆளணி
களைக் குறைத்த விமான நிலையங்க
ளும் அவற்றின் பங்குதாரர்களுமே
தற்போதைய நிலைமையைச் சமாளிக்க
முடியாமல் திணறுவதாக சர்வதேச
விமான நிலையங்களின்(Airports Council International) ஐரோப்பியப் பிரிவு தெரிவித்
துள்ளது.ஐரோப்பாவின் மூன்றில் ஒரு பங்கு விமானநிலையங்கள் இவ்வாறு நெருக்கடியை எதிர்கொள்கின்றன.
உலகில் கொரோனா தொற்று நோய்க் காலப் பயணக் கட்டுப்பாடுகள் பெரும்
பாலும் முற்றாக நீக்கப்பட்டுள்ளதை அடுத்து உல்லாசப்பயணங்கள் முந்திய பழைய நிலைக்கு மெல்லத் திரும்பத் தொடங்கியுள்ளன. பாரிஸ் நகரின் சுற்
றுலா மையங்களில் அதிக எண்ணிக்கை
யான வெளிநாட்டுப்பயணிகளைக் காண முடிகிறது.வைரஸ் தொற்றுக்கள் கோடை
காலத்தை அண்டி முற்றாகத் தணியலாம்
என்றும் எனினும் புதிய திரிபுகள் மேலெ
ழுவதற்கு வாய்ப்புண்டு என்றும் நிபுணர்
கள் கூறுகின்றனர்.
🔵வைரஸ் எச்சரிக்கை
பிரான்ஸின் அறிவியல் ஆலோசனைக்
குழுவின் தலைவர் இன்று செய்தி ஊட
கம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில்
பெருந் தொற்று நோய் “கட்டுப்பாட்டுக்
குள்” கொண்டுவரப்பட்டுள்ளதே தவிர
“முடிவுக்கு வந்துவிடவில்லை” என்று
கூறியிருக்கிறார். நாட்டில் ஐந்தாவது
அலை இந்த மாத இறுதியில் குறைந்து
நீங்கிவிடும் என்று தெரிவித்த அவர்,
எதிர்வரும் செப்ரெம்பரில் பாடசாலைகள்
மீள ஆரம்பிக்கின்ற சமயத்தில் புதிய
திரிபு ஒன்று தீவிரமாகப் பரவலாம் என்று
எச்சரித்துள்ளார்.
ஒமெக்ரோன் திரிபின் மாறுபாடடைந்த
பல புதிய திரிபுகளை உலக நிபுணர்கள்
தொடர்ந்து கண்காணித்து ஆய்வு செய்துவருகின்றனர்.
-பாரிஸிலிருந்து குமாரதாஸன்.
06-05-2022