யாழ்.கோண்டாவில் கிழக்கு சந்திக்கு அண்மையாக நேற்று இடம் பெற்ற சைக்கிள் தனியார் பஸ் விபத்தில் படுகாயமுற்ற நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று வெள்ளிக்கிழமை மதியம் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வந்த முதியவர் சிகிச்சை பலனின்றிய நிலையில் சனிக்கிழமை பகல் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த முதியவர் கடையில் பொருட்கள் வாங்குவதற்காக வீதிச் சந்தியைக் கடக்க முயன்ற போதே குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உரும்பிராய் கிழக்கைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான மாசிலாமணி யோன்ராசன்(வயது-62) என்பவரே யாழ்.போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணத்தைத் தழுவிக் கொண்டுள்ளார்.
மரண விசாரனையை யாழ்.போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற் கொண்டதைத் தொடர்ந்து சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.