அதிக எடை மற்றும் உடற்பருமன் ஆபத்தான போக்கில் அதிகரிப்பு!

0
303

ஆரோக்கியமற்ற உணவுச் சந்தைகள்
டிஜிட்டல் வாழ்க்கை முறையால் கேடு

உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்
பியப் பிராந்தியத்தில் அதிக உடல்
எடை மற்றும் உடற்பருமன் ஆபத்தான
போக்கில் அதிகரித்து வருகிறது என
எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ஐரோப்பியக் கண்டத்தில் ஆண்டு தோறும் 1.2 மில்லியன் மரணங்களுக்கு
உடற்பருமன் மற்றும் உடல் எடை அதிக
ரிப்புக் காரணமாகின்றது.
அமெரிக்கா தவிர்ந்த உலகின் ஏனைய
பகுதிகளுடன் ஒப்பிடுகையில் ஐரோப்
பாவில் வளர்ந்தோரில் காற் பங்கினர்
உடற்பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெவ்வேறு வகையான 13 புற்று நோய்
களுக்கும் இருதய நோய்கள் பலவற்றுக்
கும் காரணமான உடற்பருமன் ஆண்டு
தோறும் இரண்டு மில்லியன் புற்று நோய்
களை ஏற்படுத்துகின்றது என்று தெரி
விக்கப்படுகிறது.

உடல் எடை உடற் பருமன் கடந்த ஐந்து தசாப்தங்களில் 138 வீதத்தால் உயர்ந்
துள்ளது. ஒரு தொற்று நோயின் கணக்
கில் அது பெருகிவருகிறது என்று உலக
சுகாதார நிறுவனம் ஓர் அறிக்கையில்
தெரிவித்திருக்கிறது. இனிப்புப் பானங்
கள், ஆரோக்கியமற்ற உணவுவகைகளை வீடுகளுக்கு நேரடியாக விநியோகிக்கும்
ஒன்-லைன் உணவுச் சந்தைகள், குழந்தைகளிடையே ஒன் லைன் வீடியோ கேம், சோசல் மீடியா போன்றவை உட்பட ஐரோப்பாவின் உச்சபட்சமான டிஜிட்டல் வாழ்க்கை முறைச் சமூகம் போன்ற பலவற்றைக் காரணங்களாகக்
காட்டியுள்ள அந்த அறிக்கை, உடற் பரு
மனைத் தடுப்பதற்கு அவசரமான கொள்
கை மாற்றங்கள் அவசியம் என்று தெரி
வித்துள்ளது. அதிக இனிப்புக் கலந்த
பானங்கள் உட்பட குழந்தைகளை எட்டு
கின்ற ஆரோக்கியமற்ற உணவுகள் மீது
உச்ச வரி விதிப்பது உட்பட உணவுப்
பழக்க வழக்கங்களை மாற்றுகின்ற திட்
டங்களை சுகாதார அமைப்பு பரிந்துரைத்
திருக்கிறது.

2016 ஆம் ஆண்டுத் தரவுகளின் படி ஐரோப்பாவில் வளர்ந்தவர்களில் 59 வீதமானவர்களும் மூன்றில் ஒரு சிறுவர்
களும் உடற்பருமனால் பாதிக்கப்பட்டுள்
ளனர்.கொரோனாத் தொற்று நோய்
முடக்கங்களும் அது தொடர்பான வாழ்வு
முறை மாறுதல்களும் உடற் பருமன் வேக
மாக அதிகரிப்பதற்குக் காரணமாகியுள்
ளன என்றும் தெரிவிக்கப்படுகிறது.

உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்
பியப் பிராந்தியம் என்பது ஐரோப்பா, மத்
திய ஆசியா அடங்கலாக 53 நாடுகளை உள்ளடக்கியதாகும்.

குமாரதாஸன். பாரிஸ்.
03-05-2022

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here