உக்ரைன் மோதலில் எவருமே வெற்றியீட்டப் போவதில்லை! ஜேர்மனியில் பிரதமர் மோடி!

0
382

மூன்று நாள் ஐரோப்பிய பயணத்தில்
டென்மார்க், பிரான்ஸுக்கும் விஜயம்

உக்ரைன் போரில் எந்த நாடும் வெற்
றியீட்டப்போவதில்லை. நாங்கள் அமை
தியையே நாடுகின்றோம். மோதலை
முடிவுக்குக் கொண்டுவருமாறு வேண்டு கோள் விடுக்கிறோம்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி
ஜேர்மனியின் புதிய சான்சிலர் ஒலாப் சோல்ஸுடன் பேச்சு நடத்திய பின்னர் இவ்வாறு கூறியிருக்கிறார்.

சமீபகால பூகோள அரசியல் நிகழ்வுகள்
உலகின் அமைதியும் ஸ்திரத்தன்மையும்
எவ்வளவு இலகுவாக உடையக்கூடிய
நிலையில் இருந்துள்ளன என்பதைக்
காட்டுகின்றன. மோதலின் ஆரம்பத்தி
லேயே உடனடிப் போர் நிறுத்தத்துக்கு
அழைப்பு விடுத்தோம். சகலருக்கும்
இழப்புகளைத் தரவுள்ள இந்தப் போரில்
எந்தத் தரப்புக்கும் வெற்றி வாய்க்கப்
போவதில்லை – என்றும் மோடி தெரிவித்
திருக்கிறார்.

மூன்று நாள் – மூன்று நாடுகளுக்கான
விஜயத்தை ஆரம்பித்துள்ள இந்தியப்
பிரதமர் இன்று திங்கட்கிழமை ஜேர்மனி
யின் தலைநகர் பேர்ளினை வந்தடைந்
தார்.அங்கு அவருக்கு மரியாதை அணி
வகுப்பு நடத்தப்பட்டது.சான்சிலர் ஒலாப் சோல்ஸுடன் அவர் தனது முதலாவது அரசுமுறை நேரடிச் சந்திப்பை நடத்தி
னார். பேர்ளினில் வசிக்கும் இந்தியச்
சமூகத்தவர்களையும் மோடி சந்தித்து
உரையாடினார்.

மோடியுடனான சந்திப்புக்குப் பிறகு
பேசிய சான்சிலர் ஒலாப் சோல்ஸ், போரை நிறுத்துமாறு புடினுக்கு அழைப்பு
விடுத்தார்.”இந்தப்போரை நிறுத்துங்கள், இந்த முட்டாள்தனமான கொலைகளை நிறுத்துங்கள், உங்கள் படைகளைத் திரும்பப்பெறுங்கள்”என்று அவர் கோரி
னார்.

இந்திய அரசு உக்ரைன் நாட்டின் மீதான
ரஷ்யாவின் படையெடுப்பை வெளிப்
படையாகக் கண்டிக்காமல் ராஜீக நடு
நிலையைப் பேணி வருகின்றது. ஐ. நா.
சபையில் ரஷ்யாவைக் கண்டிப்பதற்காக
வும் மனித உரிமைகள் சபையில் இருந்து
மொஸ்கோவை வெளியேற்றுவதற்கா
கவும் நடத்தப்பட்ட வாக்கெடுப்புகளில்
இந்தியா கலந்துகொள்ளாமல் விலகி
இருந்தது. கடந்த மாதம் முதல் அது ரஷ்
யாவிடமிருந்து எரிசக்தி இறக்குமதியை
அதிகரித்திருக்கிறது. இந்தப் பின்னணி
யில் போரில் சிக்கியுள்ள ஐரோப்பாவுக்கு
வருகை தந்துள்ளார் மோடி. ஜேர்மனி,
டென்மார்க், பிரான்ஸ் ஆகிய முக்கிய
நாடுகளின் தலைவர்களைச் சந்திக்க
வுள்ள நிலையில் ரஷ்யாவின் படை
யெடுப்பைப் பகிரங்கமாகக் கண்டிக்கும் விடயத்தில் சர்வதேச அழுத்தத்தை இந்தியப் பிரதமர் எதிர்கொண்டுள்ளார்
என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜேர்மனியில் இருந்து டென்மார்க் செல்
லவுள்ள மோடி பிரதமர் Mette Frederiksen
அம்மையாரைச் சந்திக்கிறார். பின்னர்
அவர் அங்கு டென்மார்க், பின்லாந்து, சுவீ
டன், நோர்வே,ஐஸ்லாந்து தலைவர்களு
டன் இரண்டாவது நோர்ட்டிக் – இந்தியா
உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார்.
அங்கிருந்து திரும்பும் வழியில் பாரிஸில்
அதிபர் மக்ரோனையும் சந்தித்துப் பேசவுள்ளார்.

          -பாரிஸிலிருந்து குமாரதாஸன்
                                             02-05-2022

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here