இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி இராமேஸ்வரத்தில் மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடல் எல்லையைத் தாண்டி, அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவதாகத் தெரிவித்து இருநாட்டு மீனவர்களும் கைது செய்யப்படுவதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக இலங்கை இந்திய மீனவர் நலன்புரி அமைப்பின் இந்தியத் தலைவர் என்.தேவதாசன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த 31 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ள 16 மீனவர்களையும் அவர்களின் 3 படகுகளையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழக மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் கடந்த மாதம் 31 ஆம் திகதி இந்திய மீனவர்கள் சிலர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இராமநாதபுரத்தைச் சேர்ந்த 3 மீனவர்களும் கோட்டைப்பட்டிணத்தைச் சேர்ந்த 4 மீனவர்களும் நாகபட்டிணத்தைச் சேர்ந்த 9 மீனவர்களுமே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.