பாரிஸ், லண்டன், பேர்ளினை ரஷ்யாவின் அணு ஏவுகணை 200 நொடியில் சுடுகாடாக்கும்?

0
290

தொலைக்காட்சியில் விவரிப்பு

ஐரோப்பாவின் முக்கிய நகரங்களாகிய
பாரிஸ், லண்டன், பேர்ளின் மூன்றையும்
200 நொடிகளுக்குள் தாக்கி நிர்மூலமாக்
குகின்ற அணு வல்லமை ரஷ்யாவிடம்
உள்ளது.

பால்டிக் கடலில் உள்ள ரஷ்யாவின் கடற்
படைத் தளமாகிய கலினின்கிராட்டில் (Kaliningrad) இருந்து ஏவக்கூடிய”சர்மாட்”
அணு ஏவுகணை (Sarmat missile) பேர்
ளின் நகரை 106 நொடிகளிலும் பாரிஸை
200 நொடிகளிலும் லண்டனை 201 விநாடி
களிலும் இருந்த இடம் தெரியாமல் அழித்
துவிடவல்லது.

மொஸ்கோவில் அரசுத் தொலைக் காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ஒன்
றில் இவ்வாறு வரைபடங்களுடன் விளக்
கம் அளிக்கப்பட்டுள்ளது.’சனல் வண்’
சேவையில் அதிக எண்ணிக்கையா
னோரால் பார்வையிடப்படுகின்ற நிகழ்
ச்சியில் அணு ஆயுதத் தாக்குதல் தொடர்
பாக நடத்தப்பட்டுள்ள அந்த விவாதம் உலகெங்கும் அணு ஆயுத மோதல் தொடர்பான அச்சத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.

இது ஒர் அச்சமூட்டும் பரப்புரை மட்டுமே
என்று நிபுணர்கள் கூறியுள்ள போதிலும் நேட்டோ நாடுகள் தங்களது உஷார் நிலை எந்தளவு என்பதில் தீவிர கவனம் செலுத்த வேண்டிய முக்கிய கட்டம் இது
என்று அந்த அமைப்பின் முன்னாள்
தலைவர் ஒருவர் எச்சரித்திருக்கிறார். அமெரிக்காவும் நேட்டோ நாடுகளும்
உக்ரைனுக்கு இராணுவ உதவிகளை
அள்ளி வழங்கி வருவதால் ரஷ்யா தான்
தொடுத்த போரில் பெரிய வெற்றி எதனையும் எட்டமுடியாமல் தடுமாறும்
நிலை ஏற்பட்டுள்ளது.

மக்ரோன் தனது தேர்தல் வெற்றிக்குப்
பிறகு இன்று அதிபர் ஷெலான்ஸ்கியு
டன் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
பிரான்ஸின் இராணுவ, மனிதாபிமான
உதவிகள் தொடர்ந்தும் வழங்கப்படும்
என்று அச்சமயம் அவர் உறுதி மொழி
அளித்துள்ளார். ஜேர்மனி உக்ரைனுக்கு
வலுவான போராயுதங்களை விநியோ
கிப்பதற்கு அந்நாட்டின் நாடாளுமன்றம்
முழு ஒப்புதல் அளித்திருக்கிறது. இவ்
வாறு உக்ரைனுக்குத் தொடர்ந்து ஆயுத
உதவி அளிக்கப்படுவது போரைப் பல ஆண்டுகள் நீடிக்கச் செய்யும் என்று சுட்
டிக்காட்டப்படுகிறது.ரஷ்யாவைப் பலவீ
னப் படுத்துவதற்காகப் போரை நீடிப்ப
தையே அமெரிக்கா விரும்புகிறது.

ஸ்தம்பிதமடைந்துள்ள தனது இராணுவ
இலக்கை மாற்றுவதற்காக புடின் போரை
அண்டை நாடுகளுக்கு விஸ்தரிக்கக் கூடும் என்று மேற்குலகம் எதிர்பார்க்கி
றது. ரஷ்யா அதன் உலகப் போர் வெற்றி
நாள் அணிவகுப்பை மே, 9ஆம் திகதி
மொஸ்கோவில் நடத்தவுள்ளது. அதற்கு
முன்பாக உக்ரைனில் ஒரு பெரிய சண்டை அல்லது நேட்டோவின் ஆயுத
விநியோகங்கள் மீதான அதிரடி என்று
ஏதேனும் ஒரு பெரிய நடவடிக்கையை
புடின் முன்னெடுக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

      -பாரிஸிலிருந்து குமாரதாஸன்.
                                          30-04-2022

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here