மேதினம் என்பது ஒரு பண்டிகை அல்ல. களியாட்ட விழா அல்ல. தொழிலாளர்கள் ஓய்வு கொள்ளும் விடுமுறை தினமும் அல்ல. மாறாக, உலகெங்கிலுமுள்ள தொழிலாளர்கள் சகல வேறுபாடுகளையும் ஒதுக்கிவிட்டு, வர்க்க அடிப்படையில் ஒன்றுபட்டு, ஒரே குரலில் தம் இலட்சியத்தை பிரகடனப்படுத்தும் நாள். சுரண்டும் வர்க்கத்துக்கு எதிராக சுரண்டப்படும் வர்க்கம் கடந்த காலங்களில் தான் ஆற்றிய போராட்டங்களை நினைவு கொள்ளும் தினம்.
“தொழிலாளர் ஒற்றுமையைக் கொண்டு வர ஒரு தொழிலாளி இன்னொரு தொழிலாளியோடு இனம், சமயம், சாதி ஆகிய பின்னணியில் பகைமை கொள்வதற்கான அடிப்படை காரணங்களை கண்டறிந்து களைவதன் மூலம் தான் ஒற்றுமையை கொண்டு வர முடியும்.”