இத்தாலி சுதந்திர தின நடைப் பேரணியில் இணைந்து கொண்ட தமிழ் மக்கள்.

0
237

இத்தாலி சுதந்திர தின நடைப் பேரணியில் Valdilana நகரசபையின் அழைப்பில் பியல்லா வாழ் தமிழ் மக்கள் கலந்துகொண்டனர். இப்பேரணியானது Valdilana மலைப்பகுதிகளில் சுதந்திரப் போராட்ட காலத்தில் இறுதி வரை போராடி உயிர் நீத்த வீரர்களின் நினைவிடங்கள் ஊடாக நகர்ந்தது. ஒவ்வொரு இடங்களிலும் அவர்களின் வீர வரலாறு நினைவூட்டப்பட்டது. 

அவ்விடங்களில் எமது போராட்ட வரலாறுகளும் நினைவு கூரப்பட்டது. இறுதியாக அந்தப்பகுதியில் வீரச்சாவடைந்த அனைத்து வீரர்களுக்குமான நினைவிடத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து உரையாற்றிய Valdilana நகர முதல்வர் திரு Mario Carli அவர்கள் தமிழின அழிப்பு தொடர்பாகவும், எமது நீதிக்கான போராட்டங்களிற்கு அவர்களின் ஆதரவையும் வெளிப்படுத்தியதோடு தமிழ் மக்கள் சார்பாகவும் கருத்து பகிர வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்விற்கு வாய்ப்பு வழங்கியதற்கு நன்றி தெரிவித்ததோடு சுதந்திரத்திற்காக போராடியவர்களின் நினைவேந்தலில் கலந்து கொண்டதன் ஊடாக இத்தாலி சுதந்திரப் போராட்ட வீரர்களின் வீர வரலாறுகளை அறியக்கூடியதாக இருந்தது. இதுபோன்ற நிகழ்வுகள் விடுதலைக்காக போராடும் ஈழத்தமிழினம் போன்ற இனங்களுக்கும் மேலும் ஆத்ம பலத்தையும் நம்பிக்கையையும் கொடுக்கும் என்ற கருத்தோடு நவம்பர் 27 ஈழத்தமிழர்களின் மாவீரர் நாள் என்பதையும்,

 ஈழத்தமிழர்களுக்கான நீதிக்கான பயணத்தில் அனைவருடைய ஆதரவும் தேவை என்ற வேண்டுகோளுடன் நிகழ்வு நிறைவு பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here